டிச.14 ஆதார் கெடு.. 10 ஆண்டுகள் அப்டேட் கட்டாயம்.. ஆன்லைனில் அப்ளை பண்ணாம விட்ராதீங்க!
இந்திய தனித்துவ அடையாள ஆணையமானது, 10ஆண்டுகளுக்கும் மேல் ஆதார் கார்டை அப்டேட் (Aadhaar Card Update) செய்யாதவர்களுக்கு டிசம்பர் 14ஆம் தேதி வரையில் இலவச ஆன்லைன் சேவையை கொடுக்கிறது. அதன்பின் என்னவாகும்? ஆன்லைனில் எப்படி அப்டேட் செய்வது? உள்ளிட்ட விவரம் இதோ.
வருங்காலத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு கூட ஆதார் கார்டே முக்கிய ஆவணமாக பயன்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது. இதனாலேயே குழந்தைகளுக்கு ஆதார் கார்டு எடுக்கவும், 10 வருடங்களுக்கு மேலாக புதுப்பிக்காத ஆதார் கார்டுகளை புதுப்பிக்கவும் இந்திய தனித்துவ அடையாள ஆணையமானது, தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது.
இதிலும் 10 வருடங்கள் அப்டேட் செய்யாமல் இருந்தால் கட்டாயம் செய்துவிட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது. இதில் ஆதார் கார்டு பெயர் மாற்றுதல் (Aadhaar Card Name Change), ஆதார் மொபைல் நம்பர் மாற்றுதல் (Adhaar Card Mobile Number Change), ஆதார் கார்டு முகவரி மாற்றுதல் (Adhaar Card Address Change), ஆதார் கார்டு இமெயில் மாற்றுதல் (Aadhaar Card Email Change) உள்ளிட்டவை அடங்கும்.
ஆனால், இப்போது ஆன்லைனில் அப்டேட் செய்ய வேண்டுமானால், முகவரியை மட்டுமே மாற்ற முடிகிறது. மற்ற டேட்டாக்களை மாற்ற வேண்டும் என்றால், ஆதார் சென்டரில் (Aadhar Center) மட்டுமே முடியும். ஆகவே, முகவரி விவரங்களை அப்டேட் செய்யாதவர்கள் எப்படி செய்வது என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
ஆதார் கார்டு முகவரி அப்டேட்: முதலில் இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் அதிகாரப்பூர்வ வெப்சைட்டான யுஐடிஏஐ (UIDAI) பக்கத்துக்கு செல்ல வேண்டும். அப்போது, ஆங்கிலம், இந்தி, தமிழ் உள்ளிட்ட பல்வேறு விருப்ப மொழிகளின் டேப்கள் தோன்றும். அதில் உங்களது மொழியை தேர்வு செய்து கொள்ளுங்கள்.
இதையடுத்து, அப்டேட் ஆதார் (Update Aadhaar), கெட் ஆதார் (Get Aadhaar) மற்றும் ஆதார் சர்வீசஸ் (Aadhaar Services) என்னும் மூன்று டேப்களை பார்க்க முடியும். அதில் அப்டேட் ஆதார் டேபை கிளிக் செய்துகொள்ளுங்கள். ஒருவேளை ஆதார் டவுன்லோட் செய்ய வேண்டுமானால், கெட் ஆதார் டேப்பையும், மொபைல் வெரிபிகேஷன், இமெயில் வெரிபிகேஷன் போன்றவற்றுக்கு ஆதார் சர்வீசஸ் டேப்பையும் கிளிக் செய்துகொள்ளுங்கள்.
அதில் அப்டேட் அட்ரஸ் இன் யுவர் ஆதார் பக்கத்தை கிளிக் செய்யுங்கள். இப்போது, உங்களது ஆதார் எண்ணோடு கேப்ட்சா வெரிபிகேஷன் கேட்கப்படும். அதை கொடுத்தவிட்டால், ஆதாருடன் இணைக்கப்பட்டிருக்கும் மொபைல் நம்பருக்கு ஓடிபி அனுப்பப்படும். அதையும் கொடுத்து உள்ளே செல்லுங்கள். இப்போது, நீங்கள் மாற்ற வேண்டிய முகவரியை மாற்றலாம்.
ஒருவேளை முகவரி சரியாக இருந்தாலும், அதற்கான டாக்குமென்ட்டுகளை அப்லோட் செய்திருக்க வேண்டியது கட்டாயம். அதை செய்ய வேண்டும் என்றால், முகவரிக்கு தேவையான டாக்குமெண்ட்டின் காப்பி எடுத்துக்கொள்ளுங்கள். அதை அப்லோட் செய்த பின்பு, உங்களது இமெயிலுக்கு சர்வீஸ் ரிக்கொஸ்ட் நம்பர் (Service Request Number) அனுப்பப்படும். இந்த முகவரி அப்டேட் 15 வேலை நாட்களுக்குள் பதிவு செய்யப்பட்டுவிடும்.
No comments:
Post a Comment