60 வயது நிரம்பிய* *மூத்த குடிமகனுக்கு ஒரு* *மகிழ்ச்சியான* *செய்தி* - Kalviseithikal--கல்விசெய்தி

Featured Post

கல்லூரி ஆசிரியர்களுக்கு விரைவில் பொது மாறுதல் கலந்தாய்வு நடத்த திட்டம்

  கல்லூரி ஆசிரியர்களுக்கு விரைவில் பொது மாறுதல் கலந்தாய்வு நடத்த திட்டம்   அரசு பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு இ...

Monday, August 14, 2023

60 வயது நிரம்பிய* *மூத்த குடிமகனுக்கு ஒரு* *மகிழ்ச்சியான* *செய்தி*

*60 வயது நிரம்பிய* *மூத்த குடிமகனுக்கு ஒரு* *மகிழ்ச்சியான* *செய்தி* 
__________________________________________________
மூத்த குடி மக்களுக்கு ஒரு நற்செய்தி இந்திய மத்திய அரசு இந்தத் திட்டத்தின் கீழ் 60 வயதுக்கு மேற்பட்ட அனைத்து சீனியர் சிட்டிசன்களுக்கும் உதவும் முறையில் கைபேசி எண் *14567* என்ற எண் கொடுக்கப்பட்டுள்ளது.

அதைத் தொடர்பு கொண்டால் அவர்கள் 
நமக்கு என்ன குறை? என்று கேட்பார்கள்.
 
1.வயதானவர்களைப் பெற்ற பிள்ளைகள் சரிவர பராமரிப்பதில்லையா என்ற குறையா ? 

அல்லது 

2. மருத்துவ ரீதியான குறையா ?

அல்லது 

3. ஓய்வூதியம் பெறுவதற்கான ஏதாவது தடை உள்ளதா?

4.  வங்கி சம்பந்தப்பட்ட அல்லது

 நிர்வாகம் தொடர்பாக ஏதாவது குறையா?

 இருப்பின் கூறுங்கள் என்று கேட்டார்கள்

 இந்த சேவை மையம் 
காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை குறைதீர்க்கும் மையமாக மத்திய அரசு கொண்டு வந்துள்ளது

 இதன் மூலம் மூத்த குடிமக்களுக்கு ஒரு வழிகாட்டியாக அல்லது எங்கு சென்றாலும் நிதானமாகவும் பாதுகாப்பாகவும் செல்லக்கூடிய இடங்களுக்கு செல்ல முடியா விட்டால் மேற்கண்ட எண்ணான *14 567* என்ற எண்ணைத் தொடர்பு கொண்டு கூறினால் 

நமக்கு எந்தவிதக் கஷ்டமும் இல்லாமல் ஒரு பெரிய வழிகாட்டியாக நமது உயிருக்குப் பாதுகாப்பாக அனைத்து மூத்த குடிமக்களுக்கும் மத்திய அரசு செய்துள்ளது.

 இந்த மத்திய அரசு செய்த இந்த மையத்துக்கு அனைத்து மூத்த குடிமக்களும் வரவேற்புக் கொடுத்து மத்திய அரசு பாராட்டி வருகிறது.

 இது ஒரு வரலாற்று சிறப்புமிக்கச்  சேவை மையம் ஆகும் .
அனைவரும் இதனைப் பயன்படுத்திக் கொள்ளவும் எந்த வேலைக்கும் எந்த அச்சமும் இன்றி நம்முடன் எப்பொழுதும் ஒரு உதவியாளர் இருப்பது போல் இந்த மத்திய அரசின் சேவை எண் *14 567* யாரும் மறக்க வேண்டாம் என்று அன்புடன் அனைத்து மூத்த குடிமக்களுக்கும் தெரிவித்துக் கொள்கிறேன். பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
 பயன் பெறுங்கள் 

உதவி கேளுங்கள் உங்கள் குறைகள் தீர்க்க 
உங்களுடன்
 இந்த மத்திய சேவை மையம் துணை புரியும். மத்திய அரசுக்கு மனமார்ந்த நெஞ்சார்ந்த வணக்கம் என
இ. கல்யாணசுந்தரம் 
 மாவட்டத் தலைவர்  
மத்திய அரசு நலத்திட்ட *பிரிவு* *கடலூர் மேற்கு.

என நான் படித்த செய்தியைப் பகிர்ந்துள்ளேன்.

  சற்றுமுன்பு இந்த நம்பரில் தொடர்பு கொண்டு ஒருவர் பேசிய பொழுது

எதிர்முனையில் பேசிய பெண்மணி 
 பெயர் ஊர் விலாசம் கேட்டார்கள் என்னகுறை என்று கேட்டபோது 

எனக்கு நான்குமாத D.A அரியர் கிடைக்கவில்லை  எனக் கூறியுள்ளார்.

 எங்குவேலை செய்து ஓய்வு பெற்றீர்கள் ?
என்று கேட்டபோது எல்லா விபரத்தையும் சொல்லி உள்ளார்.
பின்  நாளை காலையில் அவர்களுடைய டீம் நேரடியாக  SBI JIPMER BRANCH க்கு போய் விசாரனை செய்து நடவடிக்கை எடுப்பதாகச் சொன்னார்கள்.

 உடல்நலம் பற்றியும் உடம்பில் வேறு ஏதாவது குறைபாடுகள் இருந்தாலும் சொல்லுங்கள் உதவி செய்கிறோம் என்று மிகப் பணிவுடன்  கூறினார்கள்.

மேலும்
 உங்கள் பிள்ளைகள் உங்களை கவனித்துக்கொள்கிறார்களா? 
அருகில் இருக்கிறார்களா? தூரத்தில் இருக்கிறார்களா ?
என்று மிக அக்கறையுடன் விசாரித்தார்கள்.

எந்தக் குறையிருந்தாலும் சொல்லுங்கள் என்று சொன்னார்கள்.

 இந்த முதியோர் குறைதீர்க்கும் சேவையை மத்திய அரசும் மாநில அரசும் சேர்ந்து செயல்படுத்தி வருகிது என்று சொன்னார்கள்.

 நண்பர்களே உங்களுக்கு ஏதாவது குறையிருந்தால் இந்த 14567 ல் தொடர்பு கொள்ளவும்.

உங்கள் உறவினர்,மற்றும் நண்பர்களுக்கு இந்த பயனுள்ள தகவலை அனுப்பி வையுங்கள், நன்றி.

No comments:

Post a Comment

Popular

Post Top Ad