Merit மற்றும் Ranking- படி பதவி உயர்வு முன்னுரிமைப் பட்டியல் கடித விளக்கம்!!!
இதில் பெற வேண்டிய தெளிவுகள்
1.இது உச்சநீதிமன்ற உத்தரவு 6415/2021 ன்படி, Merit மற்றும் rank - ஐ கணக்கில் கொண்டு பதவி உயர்வு பட்டியல் தயார் செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது. காரணம் உச்சநீதிமன்ற உத்தரவில் ஜீலை 31க்குள் இந்த மாதிரியான panel - ஐ தயார் செய்ய வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.
2. இது ஆசிரியர்களுக்கு மட்டுமானது இல்லை மாறாக அனைத்து அரசு ஊழியர் ஆசிரியர்களுக்கும் பொதுவானது.
3.ஆசிரியர்கள் பதவி உயர்வில் TET-க்கும் இதற்கும் தொடர்பு இல்லை. TET Case தனி track.
4.இதன்படி என்னதான் merit மற்றும் rank அதிகமாக இருந்தாலும், அந்தந்த வருடத்தைத் தாண்டி முன்னுரிமைப் பட்டியலில் இடம்பெற முடியாது.
5- TRB மூலம் appointment பெற்றவர்கள் மற்றும் TNPSC மூலம் appointment பெற்றவர்களில், தாங்கள் நியமனம் பெற்ற வருடத்தில் , தன்னோடு நியமனம் பெற்றவர்களில் merit மற்றும் rank அடிப்படையில் முன்னுரிமை பெறமுடியும்.
6. இனி merit மற்றும் rank ன் படிதான் promotion Panel தயார் செய்யப்படும்.
7. எந்த வழியிலும் தான் நியமனம் பெற்ற வருடத்தைத் தாண்டி , முந்தைய வருடத்தில் நியமனம் பெற்றவர்களுடன் முன்னுரிமை பெற இயலாது.
8. இதுவரை Merit மற்றும் rank அடிப்படையில் இல்லாமல் பதவி உயர்வு பெற்றவர்களை இது கட்டுப்படுத்தாது.
9. ஏப்ரல் 2023 முதல் இது நடைமுறைக்கு வருகிறது.
10. Group - 1, level-ல் நியமனம் பெற்றவர்களின் promotion panel , merit மற்றும் rank அடிப்படையில் விரைவாக தயார் செய்யப்பட்டு, உடனடியாக பதவி உயர்வு வழங்கப்படும் என்றே தெரிகிறது.
No comments:
Post a Comment