Header Ads Widget

விருதுநகரில் அரசு கலைக் கல்லூரி அமைத்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

விருதுநகரில் அரசு கலைக் கல்லூரி அமைத்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகி, மாணவர்கள் அனைவரும் உயர்கல்விக்கு செல்ல கல்லூரி கல்லூரிகளாக ஓடிக்கொண்டிருக்கும் நேரத்தில், மாவட்ட தலைநகராக இருக்க கூடிய விருதுநகரில் மட்டும் அரசு தரப்பில் ஒரு கல்லூரி கூட இல்லை என்பது விருதுநகர் மாணவர்களின் உயர்கல்வி வாய்ப்பை பாதித்து வருகிறது.

இதனைத்தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் 12ம் வகுப்பு தேர்வில் முதல் 3 இடங்களை பிடித்து வரும் விருதுநகரில் ஒரு மருத்துவக்கல்லூரி, செவிலியர் பயிற்சி பள்ளி மற்றும் தொழிற்பயிற்சி பள்ளி என சில கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வந்தாலும் பெரும்பாலான மாணவர்கள் சேரக்கூடிய கலை அறிவியல் பிரிவுக்கு ஒரு கல்லூரி கூட இல்லாத காரணத்தால், வேறு வழியின்றி தனியார் கல்லூரியில் சேரும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

Post a Comment

0 Comments