NEET UG 2023: டாப் கல்லூரிகளில் 70% எம்.பி.பி.எஸ் சீட்கள் இந்த 8 மாநில மாணவர்களுக்கு; இந்தப் பட்டியலில் தமிழ்நாடு இருக்கிறதா?
NEET UG 2023: நீட் தேர்வில் 9 மாநில மாணவர்கள் அதிக மதிப்பெண்களுடன் தகுதி; டாப் கல்லூரிகளில் 70% இடங்கள் இவர்களுக்குத் தான்

  நீட் தேர்வு
இந்த ஆண்டு இந்தியாவின் சிறந்த மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ் (MBBS) படிப்பில் சேரும் மாணவர்களில் 70% பேர் ஒன்பது மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது.

இளங்கலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு (NEET-UG 2023) முடிவுகள் கடந்த ஜூன் 13 ஆம் தேதி வெளியிடப்பட்டது.

 மொத்தம் 11.4 லட்சம் மாணவர்கள் தகுதி பெற்றுள்ளனர். 400 மற்றும் அதற்கு மேல் மதிப்பெண் பெற்ற மொத்த மாணவர்களின் எண்ணிக்கை 2.3 லட்சமாகும், அதே சமயம் 500-619 மதிப்பெண்களுக்கு இடையில் உள்ள மாணவர்களின் எண்ணிக்கை 45,000 க்கும் அதிகமாக உள்ளது. இந்த ஆண்டு தேர்வில் 720க்கு 620 மற்றும் அதற்கு மேற்பட்ட மதிப்பெண்கள் பெற்றவர்களின் எண்ணிக்கை 18,757.

 நீட் தேர்வில் 400 மற்றும் அதற்கு மேல் மதிப்பெண் பெற்ற மாணவர்களில் கிட்டத்தட்ட 65% பேர் பீகார், கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா, ராஜஸ்தான், தமிழ்நாடு, உத்தரபிரதேசம் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய எட்டு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என்பதைக் காட்டுகிறது. மேலும், 620 மற்றும் அதற்கு மேற்பட்ட மதிப்பெண்கள் பெற்றவர்களில், டெல்லி முதல் எட்டு இடங்களில் பீகாருக்குப் பதிலாக உள்ளது.

‘பொது’ மற்றும் OBC பிரிவுகளில், நீட் தேர்வில் 400 மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைப்பது கடினம் என்றாலும், 620 மற்றும் அதற்கு மேல் மதிப்பெண்கள் பெற்றவர்களில், கிட்டத்தட்ட 66% மாணவர்கள் இந்த மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்.

இந்த ஆண்டு, 1,04,333 எம்.பி.பி.எஸ் இடங்களும் (அரசு மருத்துவக் கல்லூரிகளில் 54,278) 27,868 பி.டி.எஸ் இடங்களும் உள்ளன. இது தவிர, ஆயுஷ் படிப்புகளில் 52,720 இடங்களும், 603 BVSc (இளங்கலை கால்நடை அறிவியல் மற்றும் கால்நடை வளர்ப்பு) இடங்களும் உள்ளன.

 ஹோமியோபதி மற்றும் யுனானி மருந்துகளில் இளங்கலைப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைகளும் நீட் மதிப்பெண்களின் அடிப்படையில்தான் நடக்கிறது.

400 மற்றும் அதற்கு மேல் மதிப்பெண்கள் பெற்றவர்களில், ராஜஸ்தான் (12.3%), உத்தரப் பிரதேசம் (11.8%) மற்றும் மகாராஷ்டிரம் (9.9%) ஆகிய மாநிலங்கள் உள்ளன. பீகார், கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா, தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்கம் ஆகியவை இந்த மதிப்பெண் வரம்பில் 64.3% மாணவர்களைக் கொண்டுள்ளன.

இந்தியாவில் மொத்தம் 322 அரசு மருத்துவக் கல்லூரிகள் உள்ளன, இதில் தமிழகத்தில் அதிக இடங்கள் (5,200 க்கும் அதிகமானவை) உள்ளன, அதைத் தொடர்ந்து மகாராஷ்டிரா (4,800 இடங்களுக்கு மேல்) மற்றும் உத்தரப் பிரதேசம் (4,300 இடங்களுக்கு மேல்) ஆகியவை உள்ளன. குஜராத், கர்நாடகா, ராஜஸ்தான் மற்றும் மேற்கு வங்கம் ஆகியவை தலா 3,000 க்கும் மேற்பட்ட அரசு கல்லூரி இடங்களைக் கொண்ட மற்ற மாநிலங்களாக உள்ளன.

அரசு மருத்துவக் கல்லூரிகளில் இரண்டு பிரிவுகளின் கீழ் இடங்கள் நிரப்பப்படுகின்றன, 15% இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டின் (AIQ) கீழ் மாநிலத்திற்கு வெளியே வசிப்பவர்களுக்கு வழங்கப்படுகிறது. மீதமுள்ள 85% இடங்கள் மாநில ஒதுக்கீட்டின் கீழ் நிரப்பப்படுகிறது.

இந்த ஆண்டு நீட் மதிப்பெண் 550 மற்றும் அதற்கு மேல் உள்ள மொத்த மாணவர்களின் எண்ணிக்கை 64,520 ஆகும், அத்தகைய மாணவர்களில் பெரும்பாலானவர்கள் டெல்லி, கேரளா, மகாராஷ்டிரா, ராஜஸ்தான் மற்றும் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள். இந்த வரம்பில் ராஜஸ்தானில் (16.8%) அதிக மாணவர்கள் உள்ளனர், அதைத் தொடர்ந்து உத்தரப் பிரதேசம் (12.2%) மற்றும் மகாராஷ்டிரா (8.4%) ஆகிய மாநிலங்கள் உள்ளன.

 619 வரையிலான மதிப்பெண் வரம்பில் பீகார் முதல் எட்டு இடங்களுக்குள் இருக்கும்போது, 620 மற்றும் அதற்கு மேற்பட்ட மதிப்பெண் வரம்பில், பீகாருக்குப் பதிலாக டெல்லி (7.2%) இடம்பெறுகிறது