அரசு மாதிரி பள்ளிகளுக்கு, 422 ஆசிரியர்கள் தனியாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.


தமிழகத்தில், 38 மாவட்டங்களில், அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளிகள் செயல்படுகின்றன. பொது தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற தகுதியான, 'டாப்பர்' மாணவர்களை இந்த பள்ளிகளுக்கு மாற்றி, சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த மாதிரி பள்ளிகளில், கடந்த கல்வி ஆண்டில் ஆசிரியர் பற்றாக்குறை இருந்தது.


இதையடுத்து, பல்வேறு பள்ளிகளில் உபரியாக உள்ள ஆசிரியர்களை கணக்கிட்டு, துறை ரீதியாக அனுபவம் பெற்ற பட்டதாரி மற்றும் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள், 422 பேர், மாதிரி மேல்நிலைப் பள்ளிகளுக்கு நியமிக்கப்பட்டனர்.


இவர்கள் வேறு பள்ளிகளில் இருந்து மாற்றுப் பணி அடிப்படையில், இடமாறுதல் செய்யப்பட்டுள்ளதாக, பள்ளிக் கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்