ஆதார் கார்டை இலவசமாக அப்டேட் செய்வதற்கான கால அவகாசம் மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஆதார் கார்டு!
இந்தியர்கள் அனைவருக்குமே ஆதார் கார்டு என்பது மிக முக்கியமான ஆவணம் ஆகும். இது வெறும் அடையாள அட்டை மட்டுமல்ல; வங்கி மற்றும் பணம் சார்ந்த பல்வேறு விஷயங்களுக்கு ஆதார் முக்கியமாகும். அதோடு அரசின் நல்லத்திட்ட உதவிகளைப் பெறுவதற்கும் ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆதார் கார்டை பான் கார்டு, வங்கிக் கணக்கு, சிம் கார்டு, ரேஷன் கார்டு உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் இணைப்பதை அரசு ஆதார் கார்டில் உள்ள விவரங்கள் அனைத்தும் அப்டேட்டாக இருக்க வேண்டியது அவசியம். அப்போதுதான் அது பயன்படும். சிலர் முதன்முதலில் ஆதார் கார்டு வழங்கப்பட்டபோது எப்படி இருந்ததோ அப்படியே வைத்திருப்பார்கள். அதில் நிறைய மாற்றங்கள் வந்திருக்கும். ஆனால் அதை அப்டேட் செய்யாமலேயே விட்டுவிடுவார்கள். நிறையப் பேருக்கு ஆதார் கார்டில் எப்படி அப்டேட் செய்வது என்றே தெரிவதில்லை.ஆதார் கார்டில் அப்டேட் செய்வதற்கு கட்டணம் செலுத்த வேண்டும். இந்தக் கட்டணம் 25 ரூபாய் முதல் 50 ரூபாய் வரை இருக்கும். ஆதார் சேவை மையங்களில் இந்தக் கட்டணம் வசூலிக்கப்படும். எனனும் சில அப்டேட்கள் இலவசமாக செய்யப்படும். அதேபோல, ஆன்லைன் மூலமாக வாடிக்கையாளர்கள் தாங்களாகவே அப்டேட் செய்துகொள்ளலாம்..
0 Comments