இந்த ஆண்டு இன்ஜினியரிங் கட் ஆப் எவ்வளவு? - Kalviseithikal--கல்விசெய்தி

Featured Post

தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் அரசுப் பணியாளா்கள் ஊதிய விவரங்களை அறியலாமா? - தகவல் ஆணையா் பதில்

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலமாக, அரசுப் பணியாளா்களின் ஊதிய விவரங்களைப் பெற ஒவ்வொரு இந்திய குடிமனுக்கும் உரிமை உள்ளதாக மாநில தகவல் ஆண...

Thursday, May 11, 2023

இந்த ஆண்டு இன்ஜினியரிங் கட் ஆப் எவ்வளவு?

இந்த ஆண்டு இன்ஜினியரிங் கட் ஆப் எவ்வளவு?

'பிளஸ் 2 தேர்வில், கணிதத்தில் 'சென்டம்' குறைவாக உள்ளதால், இன்ஜினியரிங்கில் சேர்வதற்கான 'கட் ஆப்' மதிப்பெண் குறையும்,'' என, கல்வியாளர் ஜெயப்பிரகாஷ் காந்தி கூறினார்.

இதுகுறித்து, அவர் கூறியதாவது:

பிளஸ் 2 பொது தேர்வில், 47 ஆயிரம் மாணவர்கள் 'ஆப்சென்ட்' ஆகியுள்ளனர். அந்த நிலை இனிமேல் வராமல், அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த முறை கணிதத்தில், 100க்கு 100 சென்டம் எண்ணிக்கை, முந்தைய ஆண்டுகளை விட குறைந்துள்ளது.

கணிதத்தில், 90 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்தவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளதால், இன்ஜினியரிங் சேர்க்கைக்கான கவுன்சிலிங்கில் கட் ஆப் மதிப்பெண் குறைய வாய்ப்புள்ளது.

அதேநேரம், கணக்குப் பதிவியல் பாடப்பிரிவு மாணவர்களின் மதிப்பெண் அதிகரித்துள்ளது. அதில், அதிக மாணவர்கள் தேர்ச்சி பெற்று, அதிக மதிப்பெண்களும் பெற்றுள்ளனர். அதனால், பி.காம்., படிப்பில் சேர கடும் போட்டி ஏற்படும்.

சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில், முக்கிய பாடங்களுக்கான வினாத்தாள்கள் கடினமாக இருந்ததால், அதில் மதிப்பெண் குறைய வாய்ப்புள்ளது.

அதனால், இன்ஜினியரிங் மற்றும் பிற படிப்புகளுக்கான சேர்க்கையில், சி.பி.எஸ்.இ., மாணவர்களை விட, தமிழக பாடத்திட்ட மாணவர்கள் அதிக கட் ஆப் மதிப்பெண்ணுடன் முன்னிலை பெற வாய்ப்புள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

Popular

Post Top Ad