பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேர ஜூன் 9 வரை விண்ணப்பம் - Kalviseithikal--கல்விசெய்தி

Featured Post

தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் அரசுப் பணியாளா்கள் ஊதிய விவரங்களை அறியலாமா? - தகவல் ஆணையா் பதில்

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலமாக, அரசுப் பணியாளா்களின் ஊதிய விவரங்களைப் பெற ஒவ்வொரு இந்திய குடிமனுக்கும் உரிமை உள்ளதாக மாநில தகவல் ஆண...

Sunday, May 21, 2023

பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேர ஜூன் 9 வரை விண்ணப்பம்

 பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேர ஜூன் 9 வரை விண்ணப்பம்


பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேர மாணவர்கள் ஜூன் 9-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.


தமிழகத்தில் தொழில்நுட்பக்கல்வி இயக்குநரகத்தின்கீழ் 54 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள், 3 இணைப்பு கல்லூரிகள் உள்ளன. இவற்றில் தொழில்நுட்ப பட்டய (டிப்ளமோ) படிப்புகளுக்கு 19,120 இடங்கள் உள்ளன. இதில் முதலாமாண்டு மற்றும் பகுதிநேர படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை விண்ணப்பப் பதிவு இணைய வழியில் நேற்று தொடங்கியது.


விண்ணப்பக் கட்டணம் ரூ.150: இதற்கு 10-ம் வகுப்பு தேர்ச்சிபெற்ற மாணவர்கள் விண்ணப் பிக்கலாம். விண்ணப்பக் கட்டணமாக ரூ.150 நிர்ணயிக்கப்பட் டுள்ளது. எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு கட்டணமில்லை.


விருப்பமுள்ளவர்கள் https://www.tnpoly.in/ எனும் வலைதளம் வழியாக ஜூன் 9-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். தகுதி பெற்ற மாணவர்களுக்கான தர வரிசைப் பட்டியல், அந்தந்த பாலிடெக்னிக் கல்லூரிகளில் தயார் செய்யப்பட்டு வெளியிடப் படும்.


இணைய வசதி இல்லாத மாணவர்கள் அருகே உள்ளசேவை மையங்கள் வழியாக விண்ணப்பிக்கலாம். கூடுதல்விவரங்களை மேற்கண்ட இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம் என்று தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

Popular

Post Top Ad