Header Ads Widget

SIR படிவம் நிரப்புதல் : அ முதல் ஃ வரை


IMG-20251112-WA0011

SIR படிவம் நிரப்புதல் : அ முதல் ஃ வரை

வாக்காளர் சிறப்புத் தீவிர திருத்தப் பணி(SIR)க்கான Enumeration படிவம் (அதாங்க உங்க Photoவுடன் தற்போதைய Voter ID தகவல்கள் உடன் புதிதாக நிரப்ப வேண்டிய 5 பகுதிகளை உள்ளடக்கிய படிவம்) இந்நேரம் 2 பிரதிகளாகத் தங்களை வந்து அடைந்திருக்கும். இதுவரை வரவில்லை எனில், உங்களது வார்டு / பூத்திற்கான BLOவிடம் சென்று பெற்றுக்கொள்ளலாம். அல்லது உங்கள் பகுதிக்கான கட்சி முகவர்களிடம் பேசுங்கள். படிவம் கிடைக்க உதவுவர். பீகார் SIRன் முடிவுகளால் தமிழ்நாட்டு மக்கள் நலன் நாடும் அரசியல் கட்சிகள் இவ்விடயத்தில் ஓரளவு விழிப்புடனும் கூடுதல் பொறுப்புடனும் செயல்பட்டு வருகின்றன.



*Form கிடைக்கல, Onlineலயே Apply பண்ணலாமா? :*


தாராளமாக இணைய வழியில் நிரப்பி அளிக்கலாம். ஆனால், அதற்கு நீங்கள் 3 கடல்களைத் தாண்டியிருக்க வேண்டும்.


1. உங்களது Mobile எண் Voter IDயுடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்


2. Voter ID & ஆதார் அட்டை இரண்டிலும் உங்களது பெயர் ஒரே மாதிரியாக (Letters, Initial & Space உட்பட) இருக்க வேண்டும்.


3. உங்களது ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட Mobile எண் கைவசம் இருக்க வேண்டும்.


1000ல் ஒருவருக்கே இம்மூன்றும் சரியாக அமையலாம்.  நீங்கள் ஆயிரத்தில் ஒருவர் என்றால்,

https://voters.eci.gov.in/login

என்ற இணைய முகவரியில் சென்று OTP கொடுத்து உள்நுழைந்து தேவையான தகவல்களை நிரப்பி ஆதார் OTP மூலம் e-Sign செய்து சமர்ப்பிக்கலாம்.



*கடலெல்லாம் தாண்டல, கையில் உள்ள Enumeration Formஐ பூர்த்தி செய்வது எப்படி? :*

நீங்கள் பிறந்திருப்பீர்கள் என்றாலோ உங்களால் பகுதி 3ஐ நிரப்ப இயலாது. எனவே, 2002/2005 SIRல் இருக்கும் உங்களது தாய் / தந்தை / தாத்தா / பாட்டி உள்ளிட்ட யாரேனும் ஒருவரது பின்வரும் விபரங்களை பகுதி 4ல் நிரப்ப வேண்டும்.


* தாய் / தந்தை / தாத்தா / பாட்டி பெயர்

* Voter ID எண் (அதில் இருந்தால்)

* உறவு முறை

* மாவட்டம்

* மாநிலம்

* MLA தொகுதி

* MLA தொகுதி எண்

* பாகம் எண்

* அவரது பெயரின் வரிசை எண்

உள்ளிட்டவற்றை நிரப்ப வேண்டும்.



*பகுதி 5 :*


உறுதி மொழியைத் தொடர்ந்து வாக்காளரோ / அவரது 18+ உறவினரோ கையொப்பமிட வேண்டும். உறவினர் கையொப்பமிட்டால் உடன் உறவுமுறையையும் எழுத வேண்டும். 


அடுத்ததாக வாக்குச்சாவடி நிலை அலுவலர் (BLO) கையொப்பம் இடுவார். இரு படிவங்களில் ஒன்றை அவரிடம் அளித்துவிட்டு, படிவத்தை நீங்கள் நிரப்பி ஒப்படைத்துவிட்டதற்கு ஆதாரமாக (Acknowledgement) அவர் கையொப்பமிட்ட மற்றொரு படிவத்தை உடன் வாங்கி வைத்துக்கொள்ளவும். பின்னர் கட்டாயம் தேவைப்படும்.

19. 74 - Hosur

20. 88 - Salem I

21. 89 - Salem II

22. 90 - Veerapandi

23. 91 - Panamarathupatty

24. 103 - Thondamuthur

25. 104 - Singanallur

26. 105 - Coimbatore West

27. 106 - Coimbatore East

28. 107 - Perur

29. 141 - Tirupparankundram

30. 142 - Madurai west

31. 143 - Madurai Central

32. 144 - Madurai East

33. 145 - Samayanallur(SC)

34. 166 - Tiruchirapalli I

35. 167 - Tiruchirapalli II

36. 218 - Tirunelveli

37. 219 - Palayamkottai


படிவம் ரெடி! 2002/2005 SIR பட்டியல் ரெடி!! பிறகென்ன படிவத்தைக் கவனமுடன் நிரப்பி வழங்குவதன் வழி உங்களது இந்தியக் குடியுரிமையைத் தேர்தல் ஆணையத்துக்குத் தெரிவித்துவிடுங்கள்.


2002 / 2005 பட்டியலில் அப்பா, அம்மா, தாத்தா, பாட்டி என எவரது பெயருமே இல்லையெனில் இரத்த உறவுகளைக் குறிக்கலாம் என்று சில இடங்களில் கூறப்படுகிறது. உங்களது BLOவைத் தொடர்பு கொண்டு உறுதி செய்து கொள்ளவும்.

அனைத்தும் சரியெனில், தேர்தல் ஆணையம் இதுவெல்லாம் சரிதான் என்று தீர்மானித்தால், உங்களது பெயர் 04.12.2025ல் வெளிவரவுள்ள வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பிடித்துவிடும். பட்டியலில் பெயர் இல்லையெனில் 1 மாதம் மேல்முறையீட்டுக் காலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் எவ்வாறு மேல்முறையீடு செய்யலாம் என்பதை அடுத்த பதிவில் காண்போம்.

Post a Comment

0 Comments