பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான ஒருங்கிணைப்பு குழு அமைப்பு
தமிழக அரசின் உயர்கல்வித்துறையின் முதன்மை செயலர் ஏ.கார்த்திக் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறி இருப்பதாவது:
2024-2025-ம் கல்வியாண்டில் பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு ஆன்லைன் வாயிலாக நடத்தப்பட உள்ளது. இக்கலந்தாய்வு மூலம் மாணவர் சேர்க்கையை மேற்கொள்வதற்காக ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.
குழுவின் தலைவராக தொழில்நுட்ப கல்வி ஆணையரும், துணை தலைவராக அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், அண்ணா பல்கலைக்கழக பதிவாளர், தமிழ்நாடு மின் ஆளுமை ஆணையர், கல்லூரிக் கல்வி இயக்குநர், தமிழ்நாடு மாநில விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் செயலர், மருத்துவ கல்வி தேர்வுக் குழு செயலாளர், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்ட மாநில இயக்குநர், கோவை அரசு தொழில்நுட்ப கல்லூரி முதல்வர், தொழில்நுட்ப கல்வி நிதி ஆலோசகர் மற்றும் தலைமை கணக்கு அலுவலர் ஆகியோர் குழுவின் உறுப்பினர்களாகவும், கோவை அரசு தொழில்நுட்ப கல்லூரி எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் பெறியியல் துறையின் தலைவர் பேராசிரியர் டி.புருஷோத்தமன் உறுப்பினர் செயலாளராகவும் செயல்படுவர்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்
0 Comments