2024 ஏப்ரல் 1 முதல் 5 புதிய வரி விதிகள் அமல்., இவ்ளோ தொகைக்கு வரி தேவையில்லை? முழு விவரம் உள்ளே…
நாடு முழுவதும் 2024-25 ஆம் நிதியாண்டுக்கான வருமான வரி குறித்த அறிவிப்புகளை, கடந்த மாதம் நடைபெற்ற இடைக்கால பட்ஜெட்டில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டு இருந்தார். அதன்படி வரும் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் கீழ்க்காணும் புதிய வரி விதிப்பு முறை அமலுக்கு வர உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
2024 ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வரும் புதிய வரி விதிகள்:
- தனிநபரின் அடிப்படை வரி விலக்கு வரம்பு ரூ.2.5 லட்சத்திலிருந்து ரூ.3 லட்சமாக அதிகரிக்க உள்ளது.
- அரசு சாரா ஊழியர்களுக்கான விடுப்பு பணத்திற்கான வரி விலக்கு வரம்பு, ரூ.3 லட்சத்தில் இருந்து ரூ.25 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
- ரூ.5 கோடிக்கு மேல் வருமானம் இருப்பவர்களுக்கான வரி பிடித்தம், 37 சதவீதத்தில் இருந்து 25 சதவீதமாக குறைய உள்ளது.
- ரூ.5 லட்சத்திற்கு மேல் ஆயுள் காப்பீடு கொள்கையின் கீழ் பெறப்படும் முதிர்வுத் தொகைக்கு வரி விதிக்கப்படும்.
- பழைய வரி விதிப்பு படி ரூ.50,000 நிலையான விலக்கு வரியாக உள்ளது
0 Comments