ஓய்வூதிய திட்டத்தில் புதிய மாற்றம் – ஏப்ரல் 1 முதல் நடைமுறை! - Kalviseithikal--கல்விசெய்தி

Featured Post

தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் அரசுப் பணியாளா்கள் ஊதிய விவரங்களை அறியலாமா? - தகவல் ஆணையா் பதில்

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலமாக, அரசுப் பணியாளா்களின் ஊதிய விவரங்களைப் பெற ஒவ்வொரு இந்திய குடிமனுக்கும் உரிமை உள்ளதாக மாநில தகவல் ஆண...

Sunday, March 24, 2024

ஓய்வூதிய திட்டத்தில் புதிய மாற்றம் – ஏப்ரல் 1 முதல் நடைமுறை!

 


ஓய்வூதிய திட்டத்தில் புதிய மாற்றம் – ஏப்ரல் 1 முதல் நடைமுறை!

ஓய்வூதிய திட்டத்தில் புதிய மாற்றம் - ஏப்ரல் 1 முதல் நடைமுறை!

ஓய்வூதியதாரர்களின் கணக்கைப் பாதுகாக்க ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையமானது புதிய விதிமுறை ஒன்றை விதித்துள்ளது. இது ஏப்ரல் 1ம் தேதி முதல் அமல்படுத்தப்படும் எனவும் தெரிவித்துள்ள
ஓய்வூதியத்தில் புதிய மாற்றம்:

ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (PFRDA) தேசிய பென்சன் திட்ட பயனர்களுக்களுக்கான புதிய விதிமுறையை தற்போது அறிவித்துள்ளது. இதன்படி, இனி ஓய்வூதிய கணக்கில் உள்நுழைவதற்கான செயல்முறையானது மாற்றப்பட்டுள்ளது. அதாவது இதுவரை பின்பற்றப்பட்டு வந்த பயனர் ஐடி மற்றும் கடவுச்சொல் அடிப்படையிலான உள்நுழைவு செயல்முறையானது ஆதார் அடிப்படையிலான உள்நுழைவு அங்கீகார முறைக்கு மாற்றப்பட்டுள்ளது. இது தேசிய பென்சன் திட்டத்தின் சென்ட்ரல் ரெக்கார்ட் கீப்பிங் ஏஜென்சி (CRA) அமைப்பு மூலம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இப்புதிய விதிமுறைப்படி ஓய்வூதிய கணக்கில் உள்நுழைவதற்கான செயல்முறையானது இரண்டு கட்ட ஓடிபி சரிபார்ப்பு முறைக்கு உட்படுத்தப்படும்.

அரசு ஊழியர்கள் & ஆசிரியர்கள் பொது இடமாறுதல் – தடையை நீக்க அரசு முடிவு!

தேசிய பென்சன் திட்டத்தில் கணக்கு வைத்திருப்பவர்கள் முதலில் https://enps.nsdl.com/eNPS/NationalPensionSystem.html என்ற இணைப்பை கிளிக் செய்ய வேண்டும். பிறகு தோன்றும் பக்கத்தில் Login with PRAIN / IPIN → PRAIN / IPIN என்பதை கிளிக் செய்ய வேண்டும். பின் தோன்றும் Login பக்கத்தில் பயனர் ஐடி மற்றும் கடவுச்சொல்லை உள்ளிட்டு உள்நுழைய வேண்டும். பிறகு கேப்ட்சா சரிபார்ப்பை முடிக்க வேண்டும். அதன் பின் தோன்றும் பக்கத்தில் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு அனுப்பப்படும் ஓடிபி எண்ணை சரியாக உள்ளிட்டால் கணக்கை திறந்து விடலாம். இத்தகைய முறையானது பயனர்களின் கணக்கை பாதுகாக்கும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது. இச் செயல்முறையானது வருகின்ற ஏப்ரல் 1ம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது

No comments:

Post a Comment

Popular

Post Top Ad