தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் (TN TRB ) ஆனது 2023 ஆம் ஆண்டுக்கென நடைபெறவுள்ள TN TRB CMRF தேர்வு தேதியை இன்று (01.12.2023) வெளியிட்டுள்ளது. இது குறித்த முழு விவரங்கள் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே தொகுக்கப்பட்டுள்ளது.
TN TRB CMRF 2023 தேர்வு தேதி:
தமிழக அரசின் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முழு நேர Ph.D பட்டம் பயின்று வரும் மாணவர்களுக்கு உதவி புரியும் வகையில் ஆண்டுதோறும் முதல்வர் ஆராய்ச்சி உதவித்தொகை திட்டத்தின் (CMRF) கீழ் ஊக்கத்தொகை ஆனது வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஊக்கத்தொகையை பெறுவதற்கான நபர்கள் TN TRB தேர்வாணையத்தால் நடத்தப்படும் தகுதி தேர்வு மூலம் (TN TRB CMRF Exam) தேர்வு செய்யப்பட்டு வருகிறார்கள். இதனை தொடர்ந்து 2023 ம் ஆண்டுக்கான TN TRB CMRF தகுதி தேர்வுக்கான அறிவிப்பானது 16.10.2023 அன்று வெளியிடப்பட்டு விண்ணப்பங்களும் 20.10.2023 முதல் 15.11.2023 அன்று வரை பெறப்பட்டது.
இந்நிலையில் TN TRB இன்று தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்ட அறிவிப்பில் TN TRB CMRF எழுத்து தேர்வானது வருகின்ற டிசம்பர் மாதம் 12ம் தேதி நடைபெறவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இத்தேர்வானது 100 மதிப்பெண்களுக்கு 03 மணி நேரம் நடத்தப்படவுள்ளது. மேலும் இத்தேர்வில் அளிக்கப்படும் ஒவ்வொரு தவறான விடைக்கும் 1 மதிப்பெண் கழிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தேர்வுக்கான நுழைவுச் சீட்டு வெளியான பின் தேர்வர்கள் அதனை https://www.trb.tn.gov.in/ என்ற இணையதளம் வாயிலாக எளிமையாக ஆன்லைனில் பெற்றுக்கொள்ளலாம்.
0 Comments