டிஎன்பிஎஸ்சி அதிகாரபூர்வ வெளியீட்டு தேதியை வெளியிட்டுள்ளது! தேர்வர்கள் மகிழ்ச்சி – - Kalviseithikal--கல்விசெய்தி

Featured Post

கல்லூரி ஆசிரியர்களுக்கு விரைவில் பொது மாறுதல் கலந்தாய்வு நடத்த திட்டம்

  கல்லூரி ஆசிரியர்களுக்கு விரைவில் பொது மாறுதல் கலந்தாய்வு நடத்த திட்டம்   அரசு பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு இ...

Monday, December 4, 2023

டிஎன்பிஎஸ்சி அதிகாரபூர்வ வெளியீட்டு தேதியை வெளியிட்டுள்ளது! தேர்வர்கள் மகிழ்ச்சி –

டிஎன்பிஎஸ்சி அதிகாரபூர்வ வெளியீட்டு தேதியை வெளியிட்டுள்ளது! தேர்வர்கள் மகிழ்ச்சி – TNPSC Group 2 Result Official Announcement 2023


TNPSC Group 2 Result Official Announcement 2023

டிஎன்பிஎஸ்சி மூலம் குரூப் 2, 2A முதன்மை தேர்வு கடந்த பிப். 25 ஆம் தேதி நடத்தப்பட்டது. தமிழ்நாடு அரசுத் துறைகளில் காலியாக உள்ள குரூப் 2 பணியிடங்கள், குரூப் 2ஏ பணியிடங்கள்  தேர்வு முடிவுகள் கடந்த ஏப்ரல் மாதமே வெளியிடப்படும் என்று எதிா்பாா்க்கப்பட்டது.

TNPSC Group 2 Result Official Announcement 2023
TNPSC Group 2 Result Official Announcement 2023

ஆனால், 9 மாதங்களாகியும் இதுவரை தேர்வு முடிவுகள் வெளியிடப்படவில்லை. இந்நிலையில்  நிலையில் தற்போது முடிவுகள் குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

TNPSC முதன்மை எழுத்துத் தேர்வு:


TNPSC குரூப் 2, 2A, பணிகளுக்கான 5,097  நிரப்புவதற்கான முதன்மை தோ்வுகள் கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்றன.

மொத்தமாக 52,000 பேர் தேர்வுகளை எழுதினர். முதன்மை எழுத்துத் தேர்வில் கட்டாயத் தமிழ் மொழி தகுதித்தாள் மற்றும் பொது அறிவு ஆகிய இரு தாள்களுக்கும் 25.2.2023 அன்று தேர்வு நடைபெற்றது. கட்டாயத் தமிழ் மொழி தகுதித் தேர்வு மற்றும் பொது அறிவுத் தேர்வினை 51,000 க்கும் மேற்பட்ட விண்ணப்பதாரர்கள் எழுதியுள்ளனர்.

இது ஒன்றிய அரசின் குடிமைப்பணித் தேர்வாணையம் நடத்தும் முதன்மை எழுத்து தேர்வு எழுதும் நபர்களின் எண்ணிக்கையைக் காட்டிலும் மும்மடங்கு அதிகமாகும்.

இந்த தேர்வு நடைபெற்ற போதே பல்வேறு சர்ச்சைகள் எழுந்த நிலையில் தேர்வு முடிவுகள் வெளியிடுவதில் தாமதம் ஏற்படுத்தப்பட்டது. இந்நிலையில் முடிவுகள் எப்போது வெளியாகும் என அனைவரும் எதிர்பார்த்து இருக்கின்றனர்.

TNPSC குரூப் 2 முடிவுகள் வெளியீட்டு தேதி:

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் TNPSC   மூலமாக 5,446 காலிப்பணியிடங்களுக்கு குரூப் 2, குரூப் 2ஏ முதன்மை தேர்வு கடந்த பிப். 25 ஆம் தேதி நடத்தப்பட்டது.

இந்த நிலையில் தற்போது TNPSC குரூப் 2 தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி குறித்த அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.

அதன் படி, குரூப் 2 பணிகளுக்கான முதன்மை தேர்வு முடிவுகள் டிசம்பரில் வெளியிடப்படும் என அரசு அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிட்டது. தற்போது TNPSC குரூப் 2 பணிகளுக்கான முதன்மை தேர்வு முடிவுகள் டிசம்பர் 5ஆம் தேதி என டிஎன்பிஎஸ்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த அறிவிப்பை தொடர்ந்து தேர்வர்கள் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

TNPSC குரூப் 4 தேர்வு அறிவிப்பு:

அரசுப் பணி என்பதால், குரூப் 4 தேர்வுக்கு தேர்வர்கள் மத்தியில் அதிக வரவேற்பு உள்ளது. இதற்கு குறைந்தபட்ச கல்வித் தகுதி 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

இதற்கிடையே 2023ஆம் ஆண்டுக்கான டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு எப்போது நடைபெறும்? காலிப் பணியிடங்கள் எவ்வளவு? என்ற அறிவிப்பு இந்த மாதத்திலேயே இன்னும் சில தினங்களில் வெளியிடப்படும் என்று டிஎன்பிஎஸ்சி வட்டாரத்தில் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் தேர்வர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


No comments:

Post a Comment

Popular

Post Top Ad