157 புதிய மருத்துவக் கல்லூரிகள்; எம்.பி.பி.எஸ் சீட்கள் அதிகரிப்பு: மத்திய அரசு அதிகாரபூர்வ தகவல் - Kalviseithikal--கல்விசெய்தி

Featured Post

கல்லூரி ஆசிரியர்களுக்கு விரைவில் பொது மாறுதல் கலந்தாய்வு நடத்த திட்டம்

  கல்லூரி ஆசிரியர்களுக்கு விரைவில் பொது மாறுதல் கலந்தாய்வு நடத்த திட்டம்   அரசு பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு இ...

Thursday, December 7, 2023

157 புதிய மருத்துவக் கல்லூரிகள்; எம்.பி.பி.எஸ் சீட்கள் அதிகரிப்பு: மத்திய அரசு அதிகாரபூர்வ தகவல்

157 புதிய மருத்துவக் கல்லூரிகள்; எம்.பி.பி.எஸ் சீட்கள் அதிகரிப்பு: மத்திய அரசு அதிகாரபூர்வ தகவல்

நாட்டில் எம்.பி.பி.எஸ் இடங்கள் 1,08,848 ஆக அதிகரிப்பு; மருத்துவ கல்லூரிகளின் எண்ணிக்கையும் உயர்வு; அமைச்சர் பாரதி பிரவீன் பவார் நாடாளுமன்றத்தில் எழுத்துபூர்வமாக தகவல்

mbbs study

மருத்துவ படிப்பு (பிரதிநிதித்துவ படம்)

மத்திய அரசின் நிதியுதவி திட்டத்தின் (CSS) கீழ்157 அரசு மருத்துவக் கல்லூரிகள் மூன்று கட்டங்களாக அங்கீகரிக்கப்பட்டுள்ளனஅவற்றில் 108 ஏற்கனவே செயல்படுகின்றன என்று மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணை அமைச்சர் டாக்டர் பாரதி பிரவின் பவார் இன்று ராஜ்யசபாவில் எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார்.

ஆங்கிலத்தில் படிக்க: 157 new medical colleges approved; 108 made functional: Govt

அரசு மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளதாகவும்அதைத் தொடர்ந்து எம்.பி.பி.எஸ் இடங்களை உயர்த்தியுள்ளதாகவும் பாரதி பிரவின் பவார் கூறினார். அரசு வெளியிட்டுள்ள தரவுகளின்படி2014-க்கு முன்பு 387 ஆக இருந்த மருத்துவக் கல்லூரிகள் தற்போது 706 ஆக 82 சதவீதம் அதிகரித்துள்ளது. மேலும்2014க்கு முன் 51,348 எம்.பி.பி.எஸ் இடங்கள் இருந்த நிலையில்தற்போது 1,08,848 ஆக 112 சதவீதம் அதிகரித்துள்ளது.

முதல் கட்டமாக20 மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்களில் 58 அரசு மருத்துவக் கல்லூரிகளையும்இரண்டாம் கட்டமாக எட்டு மாநிலங்களில் 24 கல்லூரிகளையும்மூன்றாம் கட்டமாக 18 மாநிலங்களில் 75 மருத்துவக் கல்லூரிகளையும் அரசு துவக்குகிறது.

கடந்த ஒன்பது ஆண்டுகளில் நாட்டில் மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்துள்ளது என்று மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா அக்டோபரில் கூறியதைத் தொடர்ந்து இந்தத் தகவல்கள் வந்துள்ளன. கடந்த ஒன்பது ஆண்டுகளில்நாட்டில் மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்துள்ளது. இந்தியா முழுவதும் மொத்தம் 1,70,000 உடல்நலம் மற்றும் ஆரோக்கிய மையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. நாட்டிலுள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு கிரிட்டிகல் கேர் பிரிவை நாங்கள் உருவாக்குகிறோம், ”என்று அமைச்சர் மன்சுக் மாண்டவியா ஷில்லாங்கில் உள்ள NEIGRIHMS இல் உரையாற்றினார்.

2014ல் 50,000 ஆக இருந்த எம்.பி.பி.எஸ் இடங்கள் தற்போது 1,07,000 ஆக உயர்ந்துள்ளதாக அமைச்சர் மன்சுக் மாண்டவியா கூறியுள்ள நிலையில்தற்போது அந்த இடங்கள் 1,08,848 ஆக உயர்ந்துள்ளதாக பாரதி பிரவீன் பவார் கூறினார்



                     


No comments:

Post a Comment

Popular

Post Top Ad