முருங்கைக்காய்.. இந்த 10 இலையை மென்று தின்றாலே போதும்.. நுரையீரலின் நலன் காக்கும் அருமையான 5 ஜூஸ்கள்
எந்த அளவுக்கு முருங்கைக்காய் நன்மைகளை தருகிறதோ, அதுபோலவே, நுரையீரலை பாதுகாக்கவும் இந்த காய் பேருதவி புரிகிறது.. தொண்டை கரகரப்பு, சளி, தொண்டை புண் ஆகியவற்றை சரிசெய்வதில் முருங்கை சிறந்தது.. இந்தியாவில் நிலவும் அதிக காற்று மாசுபாட்டால் பாதிக்கப்படும் நுரையீரலுக்கு, சிறந்த தீர்வு முருங்கைக்காய்தான் என்கிறார்கள்
நச்சுத்தன்மை: இஞ்சி - பூண்டு இரண்டையுமே சமையலில் நிறைய சேர்த்து கொள்ளலாம். நுரையீரலில் உள்ள நச்சுத்தன்மையையும், மாசுகளையும் இஞ்சி பூண்டு நீக்குகின்றன.. 3 பூண்டு பற்களை வாரத்திற்கு 2 முறை சாப்பிட்டாலே, புற்றுநோய் தாக்கும் வாய்ப்பு 44 சதவிகிதம் குறைகிறதாம்.
நுரையீரல் வீக்கம்: ஆன்டிஆக்ஸிடன்ட் சத்துகள் நிறைந்த முட்டைகோஸ், காலிஃபிளவர்கள், பீட்ரூட், புரோக்கோலி போன்றவற்றை சமையலில் நிறைய சேர்த்து கொள்ளலாம்.. அதிலும் புரோக்கோலியால், நுரையீரலில் ஏற்படும் சேதங்கள் தடுக்கப்பட்டுவிடும்.. தடுப்பு சக்திகள் இந்த புரோக்கோலியில் நிறைய இருக்கிறதாம்.. பாதாம், முந்திரி, வால்நட், பிஸ்தா, ஆளி விதைகள், சூரியகாந்தி விதைகள் நுரையீரலுக்கு தேவையான சத்துக்களை வாரி வழங்குகின்றன.,..
கிரீன் டீ: அடுத்ததாக, ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்த கிரீன் டீ குடிக்கலாம்.. நுரையீரல் வீக்கத்தை குறைப்பதில் கிரீன் டீ பெரிதும் உதவுகிறது.. கடந்த 2017-ல் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில், 1000 பேருக்கு, ஒரு நாளைக்கு 2 கப் கிரீன் டீ குடிக்க தந்துள்ளார்.. அப்போது, கிரீன் டீயை குடிக்காதவர்களைவிட , கிரீன் டீ குடித்தவர்களின் நுரையீரல் செயல்பாடு சிறப்பாக இருந்ததாம்.
கேரட் ஜூஸ்: பீட்ரூட் கேரட் இவை இரண்டையுமே ஜூஸ் தயாரித்து குடித்தால், நுரையீரலில் நச்சுத்தன்மை நீங்கும்.. காரணம், இவைகளில் மக்னீசியம், பொட்டாசியம் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.
ஆப்பிள் ஜூஸ் குடித்து வந்தால், நுரையீரலில் ஏற்படும் பாதிப்பை குறைப்பதுடன், நுரையீரலின் நச்சுத்தன்மையை எளிதாக நீக்கலாம்.. பூசணி ஜூஸில் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் உள்ளதால், நுரையீரலை பலப்படுத்த உதவுகிறது. தக்காளியை உணவிலும் சேர்த்து கொள்ளலாம்.. ஜூஸ் தயாரித்தும் குடிக்கலாம். இது நுரையீரலின் பாதிப்பை குறைக்கிறது
No comments:
Post a Comment