கூகுள்பே கொடுத்த அதிர்ச்சி.. இனி கட்டணம் வசூல்.. விவரம் தெரிஞ்சுக்கோங்க..
கமுக்கமாக கட்டணம் வசூலிக்கும் முறையை கொண்டு வந்த கூகுள் பே - வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி
நண்பர்கள், உறவினர்களுக்கு பணம் அனுப்பவோ, மின் கட்டணம் செலுத்தவோ அதற்கான இடங்களுக்கு சென்று மணிக்கணக்கில் காத்திருக்கும் நிலை இருந்தது. ஆனால், உலகத்தையே உள்ளங்கையில் சுருக்கிவிட்ட செல்போன்களில், டிஜிட்டல் பேமெண்டுகளும் வந்தபிறகு பெரும்பாலும் இதுபோன்ற அலைச்சல் இல்லை.
வீட்டில் இருந்தே பணம் அனுப்புவதில் தொடங்கி, மின் கட்டணம், மொபைல் ரீசார்ஜ் என பலவற்றை செய்ய உதவுகின்றன ஆன்லைன் வாலட்டுகள். இந்தியாவில் போன் பே, பேடிஎம் என ஏராளமான பேமெண்ட் ஆப்கள் இருந்தாலும், அதில் முன்னணியில் இருப்பது கூகுள் பே தான். இந்தியாவில் சுமார் 6.5 கோடி பேர் பயன்படுத்தும் கூகுள் பே ஆரம்பத்தில் ஏகபோகத்துக்கும் கேஷ் பேக் சலுகையை அள்ளி வீசியது.பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கை பெருகிய சிறிது நாட்களிலேயே, கேஷ் பேக் சலுகையை வெகுவாக குறைத்துவிட்ட கூகுள் பே, இப்போதெல்லாம் ஒன்றுக்கும் ஆகாத வவுச்சர்களையே கொடுப்பதாக புலம்பாதவர்கள் இல்லை.
* 100 ரூபாய் வரை செய்யப்படும் ரீசார்ஜ்களுக்கு எந்த கட்டணமும் விதிக்கப்படவில்லை என்றாலும், 100 முதல் 200 ரூபாய் வரையிலான ரீசார்ஜ்களுக்கு 1 ரூபாய் கட்டணம் விதிக்கிறது கூகுள் பே
* 201 முதல் 300 ரூபாய் வரை 2 ரூபாயும், 301 ரூபாய்க்கு மேலான ரீசார்ஜ்களுக்கு 3 ரூபாயையும் convenience fee என்ற பெயரில் கட்டணம் விதிக்கப்படுகிறது.
* இப்போது இந்த கட்டணங்கள் எல்லாம் சிறியதாக தோன்றினாலும், அடுத்த சில ஆண்டுகளில் இவை பல மடங்கு அதிகரித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
மேலும், இதுவரை அனைத்து சேவைகளையும் இலவசமாக கொடுத்து வந்த கூகுள் பே செயலியிலேயே கட்டணம் விதிக்கப்படுவதால், இதைப் பின்பற்றி பிற பேமெண்ட் ஆப்களும் கட்டணத்தை உயர்த்தும் வாய்ப்புண்டு. இதனால், இனி வரும் நாட்களில் பயனர்கள் யுபிஐ ஆப்கள் மூலம் தங்களது பேமெண்டுகளை செலுத்தும்போது, அதிக செலவு செய்ய வேண்டிய சூழல் ஏற்படும். எனவே, கூடுதல் கட்டணங்களை தவிர்க்க விரும்புவோர் டெலிகாம் ஆபரேட்டர்களின் ஆப்கள் அல்லது இணையதளம் மூலம் நேரடியாக ரீசார்ஜ் செய்வதே இனி சிறந்த வழியாக இருக்கும்
No comments:
Post a Comment