உங்கள் ஆதாரை பாதுகாக்க என்ன செய்ய வேண்டும்? – எளிய வழிமுறைகள்! - Kalviseithikal--கல்விசெய்தி

Featured Post

தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் அரசுப் பணியாளா்கள் ஊதிய விவரங்களை அறியலாமா? - தகவல் ஆணையா் பதில்

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலமாக, அரசுப் பணியாளா்களின் ஊதிய விவரங்களைப் பெற ஒவ்வொரு இந்திய குடிமனுக்கும் உரிமை உள்ளதாக மாநில தகவல் ஆண...

Wednesday, November 15, 2023

உங்கள் ஆதாரை பாதுகாக்க என்ன செய்ய வேண்டும்? – எளிய வழிமுறைகள்!

 


உங்கள் ஆதாரை பாதுகாக்க என்ன செய்ய வேண்டும்? – எளிய வழிமுறைகள்!

உங்கள் ஆதாரை பாதுகாக்க என்ன செய்ய வேண்டும்? – எளிய வழிமுறைகள்!
பொதுமக்கள் அனைத்து அரசு பணிகளுக்கும் சமர்ப்பிக்க வேண்டிய ஆதார் அட்டையை கவனமாக கையாள்வதற்கு உதவியாக பிவிசி அட்டைகளில் எவ்வாறு பெறுவது என்பதை பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.:

மத்திய அரசு நாட்டில் உள்ள அனைத்து குடிமக்களுக்கும் இந்திய ஆதார் தனித்துவ அடையாள அட்டையினை வழங்கியுள்ளது. ஆதார் அட்டையில் உள்ள 12 இலக்க தனித்துவ எண்கள் முக்கியத்துவம் வாய்ந்தவையாக உள்ளது. பிறந்த குழந்தையின் முதல் முதியவர்கள் வரை அனைவருக்கும் அனைத்து அரசு மற்றும் பொதுப் பணிகளுக்கும் ஆதார் அட்டை அவசிய ஆவணமாக விளங்கி வருகிறது.

இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த ஆதார் அட்டையினை நாம் மிகவும் பத்திரமாக பாதுகாக்க வேண்டிய அவசியமாகும். அரசு வழங்கும் ஆதார் அட்டை மிகவும் நீளமாகவும் பேப்பர் வடிவத்திலும் உள்ளது. இதனால் இதனை மக்கள் வெளியிடங்களுக்கு எடுத்து செல்லும போது சேதம் அடையும் நிலை உள்ளது. இதனை தவிர்ப்பதற்காக ஆதார் அட்டையினை பிவிசி கார்டுகளின் மூலம் பெற்றுக்கொள்ள முடியும். இதனை பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.

வழிமுறைகள்:
  • முதலில் யூ ஐ டி ஏ ஐ இணையதளத்தில் சென்று உங்கள் ஆதார் அல்லது யூஐடி நம்பரை பதிவிட வேண்டும்.
  • பின்னர் ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் நம்பரை பதிவிட வேண்டும்.
  • இப்பொழுது உங்கள் ஆதார் உடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணுக்கு ஓடிபி எண் வரும்.
  • இதனை உள்ளிட்டு உங்கள் முகவரியினை தேர்வு செய்ய வேண்டும்.
  • இதன் பிறகு ரூபாய் 50 கட்டணம் செலுத்த வேண்டும்.
  • இப்போது உங்கள் ஆதார் பிவிசி கோரிக்கை ஏற்கப்பட்டு விடும். இதனை ட்ராக் செய்து கொள்ளும் வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளது.
  • பிவிசி ஆதார் அட்டை 15 வேலை நாட்களுக்குள் உங்கள் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும்

No comments:

Post a Comment

Popular

Post Top Ad