நிலவில் வெடித்து சிதறப்போகும் சந்திரயான்-3: விஞ்ஞானிகள் முன்வைத்த காரணம் என்ன? - Kalviseithikal--கல்விசெய்தி

Featured Post

தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் அரசுப் பணியாளா்கள் ஊதிய விவரங்களை அறியலாமா? - தகவல் ஆணையா் பதில்

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலமாக, அரசுப் பணியாளா்களின் ஊதிய விவரங்களைப் பெற ஒவ்வொரு இந்திய குடிமனுக்கும் உரிமை உள்ளதாக மாநில தகவல் ஆண...

Monday, November 6, 2023

நிலவில் வெடித்து சிதறப்போகும் சந்திரயான்-3: விஞ்ஞானிகள் முன்வைத்த காரணம் என்ன?

நிலவில் வெடித்து சிதறப்போகும் சந்திரயான்-3: விஞ்ஞானிகள் முன்வைத்த காரணம் என்ன?

IndiaISRO Chandrayaan-3
  நிலவின் தென் துருவத்தில் உறக்க நிலையில் இருக்கும் சந்திரயான் -3 வெடித்து சிதறும் அபாயம் இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளார்கள்.

சந்திரயான்-3

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) ஆந்திரப் பிரதேசத்தின் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து சந்திரயான் -3 ஐ அனுப்பியது. 

இந்த விண்கலனானது பூமியிலிருந்து சந்திரனுக்குமான பயணம் சுமார் ஒரு மாதம் ஆகும் என்று மதிப்பிடப்பட்டு ஆகஸ்ட் 23 அன்று தரையிறக்கம் செய்யப்பட்டது. 

சந்திரயான் - 3: விக்ரம் லேண்டருக்கு என்ன தான் ஆச்சு?


இதையடுத்து தனது பணியையும் வெற்றிகரமாக செய்து வந்து, தற்போது உறக்க நிலையில் இருந்து வருகின்றது என்று யாரும் அறிந்ததே. 

சந்திரயான்-3/ chandryaan -3

விக்ரம் லேண்டர் மீண்டும் எப்போது தனது பணியை ஆரம்பிக்குமா என்ற கேள்விகளுக்கு மத்தியில் சந்திரயான் -3 இல் இருந்து எந்த ஒரு சிக்னலும் கிடைக்கவில்லை என இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்திருந்தார்கள்.

இந்நிலையில் சந்திரயான் -3 குறித்து விஞ்ஞானிகள் ஒரு தகவலை தெரிவித்துள்ளனர்.

வெடித்து சிதறும் லேண்டர்

நிலவில் உள்ள சந்திரயான் 3 லேண்டர் மற்றும் ரோவர் விரைவில் வெடித்து சிதற வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்திரயான்-3/ chandryaan -3

நிலவுக்கு வளிமண்டலம் கிடையாது. இதனால் அதன் மேற்பரப்பில் ஏராளமான எரிகற்கள் வந்து விழும். ஆகவே ஒரு எரிகல் இந்த லேண்டர் மீது விழுந்தால் இது வெடித்து சிதறிவிடும்.

இதுபோன்று சூழ்நிலையில் அமெரிக்காவும் இருந்துள்ளாதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

Source: https://news.lankasri.com/article/chandrayaan-3-update-will-explode-1697960539

No comments:

Post a Comment

Popular

Post Top Ad