NET தேர்வுக்கு அக்.28 வரை விண்ணப்பிக்கலாம் - Kalviseithikal--கல்விசெய்தி

Featured Post

தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் அரசுப் பணியாளா்கள் ஊதிய விவரங்களை அறியலாமா? - தகவல் ஆணையா் பதில்

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலமாக, அரசுப் பணியாளா்களின் ஊதிய விவரங்களைப் பெற ஒவ்வொரு இந்திய குடிமனுக்கும் உரிமை உள்ளதாக மாநில தகவல் ஆண...

Tuesday, October 3, 2023

NET தேர்வுக்கு அக்.28 வரை விண்ணப்பிக்கலாம்


NET தேர்வுக்கு அக்.28 வரை விண்ணப்பிக்கலாம் 

1131890

உதவிப் பேராசிரியர் பணிக்கான யுஜிசி நெட் தேர்வுக்கு அக்டோபர் 28-ம் தேதிக்குள் பட்டதாரிகள் விண்ணப்பிக்க வேண்டும் என்று தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) தெரிவித்துள்ளது.


இதுகுறித்து என்டிஏ வெளியிட்ட செய்திக்குறிப்பு: யுஜிசி நெட் தேர்வு டிசம்பர் 6 முதல் 22-ம் தேதி வரை நடைபெறும். மொத்தம் 83 பாடங்களுக்கு பல்வேறு கட்டங்களாக தேர்வு நடத்தப்படும். பட்டதாரிகள் /ugcnet.nta.nic.in/ என்ற இணையதளம் வழியாக அக்.28-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணம் செலுத்த அக்.29-ம் தேதி கடைசி நாளாகும்.


விண்ணப்பங்களில் அக்.30, 31-ல் திருத்தங்கள் மேற்கொள்ளலாம். தொடர்ந்து டிசம்பர் முதல்வாரத்தில் ஹால்டிக்கெட் வெளியிடப்படும். இதற்கான விண்ணப்பகட்டணம், பாடத்திட்டம் உட்பட கூடுதல் தகவல்களை www.nta.ac.in எனும் இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம். 011-69227700 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம். இவ்வாறு என்டிஏ தெரிவித்துள்ளது

No comments:

Post a Comment

Popular

Post Top Ad