ஸ்பார்ஷ்  ஒரு   அறிமுகம்

1 SYSTEM FOR PENSION ADMINISTRATION RAKSHA என்பதன் சுருக்கம் தான் SPARSH ஆகும். அதாவது நமது டிஃபன்ஸ் பென்சனை நிர்வாகிக்கும் ஒரு மின்னணு,, ஆன் லைன் அமைப்பு..  பிசிடிஏ (P) அலாஹாபாத் , சரியான பென்சனை, சரியான நேரத்தில் உங்கள் வங்கி கணக்கில் (இடையில் வங்கி இல்லாமல்) , வழங்க செய்யப்பட்ட ஏற்பாடு தான் ஸ்பார்ஷ் எனப்படும்.  இனி இதை “ஸிஸ்டம்”  என்போம்.

2  பென்சன் சம்பந்தமான எல்லா நிகழ்வுகளும்(single window) ஒற்றை சாளரம் எனப்படும்  ஒரே இடத்தில்  அதாவது, பென்சன் உருவாக்கம்,(processing) வழங்கல்(disbursement) , பென்சன் சீட்டு, (slip) பென்சன் உரிமைகள்,(entitlement) , பென்சனர் சுய விபரம்( profile ), பென்சன் குறை தீர்த்தல்,(grievance) வாழ்நாள் சான்றிதழ்,( life certificate) போன்ற எல்லா பணி களும் செய்ய இந்த ஸிஸ்டெம் பயன்படுகிறது.

3  உங்கள் பென்சன் கணக்கு வங்கியிலிருந்து ,ஸ்பார்ஷ் க்கு மாற்றப்படும் போது, உங்கள் வங்கியில் பதிவு செய்யபட்ட, கைபேசி எண்ணுக்கு  ““உங்கள்  கணக்கு எண் வங்கியிலிருந்து ஸ்பார்ஷ்க்கு மாற்றப்பட்டுள்ளது.” என்று,வங்கி அனுப்பும் ஒரு sms குறுந்தகவல் வரும்.  அதன் பின் 15 அல்லது 20 நாள் கழித்து ஸ்பார்ஷ் , ஒரு sms உங்களுக்கு பதிவு செய்யப்பட்ட கைபேசிக்கு அனுப்பும் .அதில்,” உங்கள் பென்சன் கணக்கு தையார் ஆகிவிட்டது, (GENERATED), பென்சனர் ஐடி user name/id மற்றும் பாஸ்வேர்ட்(DEFAULT PW) “இது” என்று இருக்கும்.” இந்த தகவல் வந்த பின், sparsh.defencepension.gov.in என்ற இணைய பக்கத்தில் ,userid) (ஸ்பார்ஷ் பிபிஓ வின் கடைசியில் செர்விஸ் பென்சனருக்கு 01, ஃபேமிலி பென்சனருக்கு 02 என்று சேர்த்து )  மற்றும் பாஸ்வர்ட் உள்ளீடு செய்து அதில் கேட்கும் தகவல்களை கொடுத்து, புதிய உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப பாஸ்வர்ட் உருவாக்கி கொள்ளவும். பிறகு, டிக்ளரேஷன், மற்றும் அண்டர்டேக்கிங் கொடுக்கவும்.  பின்  logout செய்யவும்..

4.ஸ்பார்ஷ்  போர்ட்டலை log in செய்து உங்கள் userid மற்றும் நீங்கள் உருவாக்கிய பாஸ்வர்டை உள்ளீடு செய்தால் திரை திறக்கும்உடன் பென்சனர் டாட்டா வெரிஃபிகேஷன் (PDV) செய்யவும்.  PDV ல் , பெர்சனல்செர்விஸ்ஃபேமிலிபேங்கிங்நாமினேஷன்பே ,மற்றும் மற்ற விபரங்கள் மாற்றங்கள் செய்ததற்கான proof டாகுமென்ட் போன்ற வற்றை சரி பார்க்க வேண்டும். DOCUMENT ல் போய் பதிவேற்றமும் செய்ய வேண்டும்.

5  அதன் பின் வாழ்நாள் சான்றிதழ் கொடுக்க வேண்டும்.. இதில் ஆதார் எண் கேட்கும்  ஆதாருக்கும் பிபிஒ விற்கும்” டெமொக்ரஃபிக் வித்தியாசம் இருந்தால் நீங்கள் வாழ்நாள் சான்று MANUEL ஆகத்தான் கொடுக்க வேண்டும்மேனுவல் சான்று கொடுக்க கிளிக் செய்தால் ஒரு MLC FORM,, உங்கள் பெயர்ஸ்பார்ஷ் பி பி  எண் உடன் கிடைக்கும்.  அதில் ஒர் கெசட் அதிகாரியிடம் கைஒப்பம் வாங்கி திரும்பவும் ஸிஸ்டத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்இப்போது “ உங்கள் LC  ஏற்றுக்கொள்ள பட்டது என்றும்அடுத்த LC எப்போது கொடுக்க வேண்டும் என்ற (DUE DATE)  செய்தி வரும்அதை ப்ரின்ட் எடுத்து கொள்ளவும்.

xxx

6.  நமது வங்கி கணக்கு ஸ்பார்ஷ்க்கு மாற்றப்பட்டு விட்டதா என்று தெரிந்து கொள்ள SPARSH.DEFENCEPENSION.GOV.IN  என்ற  இணையத்தில் கிளிக் செய்து ALERT என்ற பாக்ஸில் கிளிக் செய்தால் UNIQUE IDENTIFIER என்ற தலைப்பில் ட்ராப் டௌன் வரும்அதில் SERVICE NO/,..EPPO NO/..BANK ACCOUNT NO/ SPARSH PPO NO.. ஏதாவது ஒன்றை தேர்வு செய்து  பாக்ஸில் நிரப்பவும். CAPCHA கொடுத்து,  சப்மிட் செய்யவும் இப்போது உங்கள் வங்கி கணக்கு ஸ்பார்ஷ்க்கு மாற்றபட்டிருந்தால்உங்கள் , ஸ்பார்ஷ்  பிபிஒ/  ஒரிஜினல் பிபிஒ/   பிபிஒசெர்விஸ் எண்,  ஆதார் எண்,  பான் எண்,  வங்கி கணக்கு எண் ,கைபேசி எண் போன்றவைகளுடன்அடுத்த  LC  எப்போது  DUE  என்ற விபரங்களும் வரும்மாறவில்லையானால் CAPCHA மீண்டும்  மீண்டும் கேட்கும்..   நமது பென்சன் கணக்கு அதே வங்கியில் தான் இருக்கும்.ஆனால் பென்சனை கட்டுப்படுத்தும் AUTHORITY  மாறும்.  அதாவது வங்கியின் கட்டுபாட்டில், CPPC மூலம் கட்டுப்படுத்தபட்டதுஸ்பார்ஷ்க்கு மாறிய பிறகு, PCDA, ALLAHABAD ஆல் நேரடியாக கட்டுப்படுத்தபடுகிறது.. நமது பென்சனுக்கு வங்கி பொறுப்பாகாது. PCDA ALLAHABAD மட்டுமே பொறுப்பாகும்திருத்தங்கள்,/ பென்சனர் டாட்டா,/குடும்ப பென்சன்மாற்றங்கள்வாழ்நாள் சான்று / புகார்கள் எல்லாமே ஸ்பார்ஷ்க்குள்  UN/ PW உள்ளீடு செய்து செய்து கொள்ளவேண்டும்..  பென்சனர் டாட்டா வை சரி பார்த்து  அதில் தவறு இருந்தால் அதை மாற்றும் போது, DOCUMENT என்ற தலைப்பில் கீழ் கேட்கப்படும் ஆதாரங்கள் பதிவேற்றம் செய்யப்படவேண்டும். இந்த மாற்றங்களை ஸ்பார்ஷ் ஏற்றுக்கொண்டால் ஒரு TOKEN/TICKET NO வரும்.. இந்த டோக்கன் எண்ணை 10/15 நாள்களில் ஸிஸ்டம் CONFIRM செய்யும்..( இந்த CONFIRMATION  ஸ்பார்ஷ் ரெகார்ட் ஆபீஸ் இல் இருந்து சரிபார்த்த பிறகு தான் உறுதி செய்யும்.)

7  முக்கியமாக ஸ்பார்ஷ்க்கு நம் வங்கி கணக்கு மாறிய பிறகு , நாம் செய்ய வேண்டிய வேலை பென்சனர் டாட்டா வெரிஃபிகேஷன் கிளிக் செய்து நம் பெயர்பிறந்த தேதிவிலாசம்கை பேசி எண் பாலினம் ஆகிய ( AADHAAR DEMOGRAPHIC DETAILS) எல்லாம் சரி பார்க்க வேண்டும்கூடவே நம் சார்ந்தோரின் (DEPENDANTS) மேற்கூறிய விபரங்களையும் சரி பார்க்க வேண்டும்.. இவை பிபிஒ வில் கண்ட படி இருக்க வேண்டும் என்பது அவசியம்அவ்வாறு இல்லையானால் ஆதார் கார்டில் பிபிஒ வில் உள்ள படி திருத்த வேண்டும்வங்கி பாஸ்புக்கில் பெயரையும்  பிபிஒ வில் உள்ள படி சரி செய்யவும் ( இதற்கு வங்கியை அணுகவும்.

 உதாரணம்  :   பிபபி ஒவில் ,  

S RAMAN என்று பெயர் இருந்தால்ஆதார் கார்டிலும்வங்கி பாஸ்புக்கிலும் ,   RAMAN S  ,   RAMAN SUNDAR , SUNDAR RAMAN,  ஏன்றோ இருந்தால் , அது தவறுதிருத்தப்பட வேண்டும்இதே விதி முறை தான் சார்ந்தோர் களுக்கும் பொருந்தும்இது சரி செய்யப்படாதவரை ஸிஸ்டம் ஏற்றுகொள்ளாது..   உங்கள் மற்றும் சார்ந்தோர்களின் PAN NO உள்ளிடு செய்துபதிவேற்றம் செய்யவும்பென்சனர் மர்றும் குடும்ப பென்சனர் களின் பான் எண் பதிவேற்றம் செய்யாவிட்டால் 20% வருமானவரி பிடித்தம் செய்யப்படும் என்பதை அறியவும்

 

8  ஸ்பார்ஷில்  லாகின் செய்து செர்வீஸஸ் சென்று பின் பென்சனர் டாட்டா வெரிஃபிகேஷன் ல் நுழைந்தால் UN / PW  உள்ளீடு செய்து உங்கள் பெர்சனல்செர்வீஸ் ,  ஃபேமிலி , பேங்க்,  அதர்ஸ் , நாமினேஷன்  போன்ற எல்ல DETAILS ம் சரி பார்க்கலாம்,  “ பேனா “” குறியிட்ட பாக்ஸை கிளிக் செய்து மாற்றம் செய்யலாம்.  ஆனால், DOCUMENT MENU வை கிளிக் செய்து வரும் திரையில்  கேட்கப்படும்  ஆதாரங்கள் “ PROOFS “  அத்தனையும் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்.  பிறகு தான் APPROVAL/ CONFIRMATION வரும்   அல்லது

   ஸ்பார்ஷ் போர்ட்டலில் நுழைந்து UN / PW உள்ளீடு செய்துவரும் திரையின் மெனு வில் MY PROFILE,  MANAGAE PROFILE, சென்று பென்சனர் டாட்டா வெரிஃபிகேஷன் கிளிக் செய்துசரி பார்க்கலாம்.  ‘ பேனா ‘ குறியீட்டில் கிளிக் செய்து மாற்றமும் செய்யலாம்.. முன்பு சொன்னது போலவே DOCUMENT ல் கிளிக் செய்து PROOF (ஆதாரம்பதிவேற்றம் செய்ய வேண்டும்.

9  ஸ்பார்ஷில் லாகின் செய்து

MY DOCUMENT ல் கிளிக் செய்து வரும் திரையில் 1. பென்சனர் ஸ்லிப், 2 பென்சனர் பிபிஒ, 3 கொரிஜெண்டம் பிபிஒ, 4, உங்களுக்கான சரியான பென்சன்,ENTITLEMENT, 5 வெளியீடு, DECLARATION, 6 மற்றும் FORM 16 போன்ற ஆவணங்களை பதிவிறக்கம் செய்து அச்சிட்டு கொள்ளலாம் 

10   PDV செய்யும் போதுபெர்சனல் டாட்டா சரி பார்த்தல் , மாற்றம் செய்த பின் ஒரு ஓடிபி மூலம் வெரிஃபை செய்த பின் சப்மிட் செய்து அதை சேமித்து (SAVE) செய்த பின் நெக்ஸ்ட் பாக்ஸ் மூலம் அடுத்த திரைக்கு செல்லவும்அதாவது 

செர்விஸ் டிடேல்ஸ் 

செர்விஸ் டிடேல்ஸ் : இதில் உங்கள் செர்விஸ் விபரங்கள் காணலாம்“ பெரும்பாலும்இதில் மாற்றங்கள் செய்யபட மாட்டாதுசெர்விஸ் நம்பர்., .,ரேங்க், , என்ரொல்மென்ட் தேதி,  டிஸ்சார்ஜ் தேதி, , MACP, பென்சன் டைப்,,  மெடிகல் கேட்டகரி, ,QUALIFIED SERVICE,, NON QUALIFYING SERVICE, போன்றவை இருக்கும்.  இதை சப்மிட் செய்து சேவ் செய்யவும்அடுத்து நெக்ஸ்ட் கிளிக் செய்தால் அடுத்த திரைஃபேமிலி டிடேல்ஸ் வரும் 

11   ஃபேமிலி டிடேல்ஸ் இதில் மனைவி மகன்மகள் போன்ற விபரங்களை காணலாம். ( பிபிஒ ல் பதிவு செய்யப்பட்டிருந்தால்), இதில் உள்ள விபரங்களை பெயரின் கடைசியில் உள்ள ACTION “ கண் “ என்ற பாக்ஸில் கிளிக் செய்தால் வரும் திரையில் தேவையான மாற்றங்கள் செய்யலாம்.உதாரணமாகபிறந்த தேதிமாற்றம் செய்யலாம்.   ஆதார்பான், E MAIL, போன்றவை பதிவு செய்யலாம் எல்லாமே ஓடிபி முறையில் செயல்படும்.  ஆனால், DOCUMENT  ல்  கிளிக் செய்து PROOF (ஆதாரம்பதிவேற்றம் செய்யவேண்டும்.  ADD FAMILY என்ற பாக்ஸ் மூலம் கிளிக் செய்து குடும்பத்தில் உள்ள மற்ற உறுப்பினர்களையும் சேர்த்துக் கொள்ளலாம் அது போல் குடும்ப உறுப்பினர்கள் இறந்து விட்டாலோகாணாமல் போய் விட்டாலோ,  அவர்கள் பெயர்களை நீக்கிக் கொள்ளலாம்இதற்கும் ப்ரூஃப்அப்பிடவிட் அல்லது இறப்பு சான்றிதழ்டாக்குமென்டில் போய் பதிவேற்றம் செய்யவேண்டும்  எல்லா விபரங்களும் ஸ்பார்ஷ் ரெகார்ட் ஆபிஸ் மூலம் வெரிஃபை செய்த பின் தான் உறுதி செய்யும்.. இதை சப்மிட் செய்து சேவ் செய்து கொள்ளவும்நெக்ஸ்ட் பாக்சை கிளிக் செய்தால் அடுத்த திரைபேங்க் டிடேல்ஸ் வரும்.

xxx

பேங்க் டிடேல்ஸ் : இதில் நீங்கள் பென்சன் வாங்கும்  வங்கிபெயர்கணக்கு எண் , IFSC CODE ,வங்கி கிளையின் பெயர்  ஆகியவை இருக்கும்.

தேவையானால் மாற்றம் செய்து PROOF களை பதிவேற்றம் செய்து சப்மிட் செய்து சேவ் செய்யவும்இதன் பின் நெக்ஸ்ட் பாக்சை கிளிக் செய்தால்பே டிடேல்ஸ்,   அதர் டிடேல்ஸ்,   நாமினேஷன் டிடேல்ஸ் ஆகியவை வரும்முன்பு கூறியது போல் பார்வை யிட்டுதேவையானால் மாற்றங்கள் செய்து சப்மிட் செய்து சேவ் செய்து கொள்ளவும். 

12  ஸ்பார்ஷ் சிஸ்டமில் லாகின் செய்து 

xxx

UN /PW உள்ளீடு செய்து மெனு வில் சென்று GRIEVANCE மூலம் நம் புகார்களை பதிவு செய்யலாம்.. அவ்வாறு பதிவு செய்யும் புகார்களுக்கு ஒரு “ டோக்கன் எண் “ வரும்.. அதை  10 அல்லது 15 நாள்களூக்கு பின்” ட்ராக் ரெக்வெஸ்ட்” ல் கிளிக் செய்து பணி முடிந்ததை உறுதி செய்து கொள்ளவும் 

ஸ்பார்ஷ் போர்ட்டலில் லாகின் செய்து SERVICE REQUEST கிளிக் செய்தால் INCOME TAX OPTION , FIXED MEDICAL ALLCE START / STOP  போன்றவை பார்வையிட்டுமாற்றங்களும் செய்து கொள்ளலாம் . 

xxx

13  ஸ்பார்ஷ் போர்ட்டலில் நுழைந்து சர்விஸஸ் கிளிக் செய்தால் இரண்டு பெரிய தலைப்புகள் அதாவது ப்ரி ரிடைர்மென்ட் ,  போஸ்ட் ரிடைர்மென்ட் என்று கிடைக்கும்ப்ரி ரிடைர்மென்டில், PDV,  TRACK PENSION CLAIM,  என்ற உப தலைப்பும்  POST RETIREMENTல்  PROFILE, PENSION,  LC / IDENTIFICATION,  FAMILY   என்ற உப தலைப்பும் கிடைக்கும்இவை எல்லாமே முக்கியம் என்றாலும் மிக முக்கியமான தலைப்பு, FAMILY என்பது தான்அதாவது EXSM ன் இறப்புஅதன் பின் குடும்ப பென்சன் பெறுவது இந்த தலைப்பு மூலம் தான்.


xxx

14  இறப்பு / குடும்ப பென்சன் பெறுவது : ஒரு  சர்விஸ் பென்சனர் இறந்து விட்டால் முதலில் பிபிஒ வில் உள்ளபடி பெயர் பதிவு செய்யப்பட்ட இறப்பு சான்று பெற வேண்டும்பின் இறப்பு சான்றுஇறந்தவர் ஆதார்பான் கார்ட்,வங்கி பாஸ்புக்(,JOINT ACCOUNT, அல்லது மனைவியின் தனி வங்கி கணக்கு), இவற்றை ஸ்கேன் செய்து ஸிஸ்டத்தில் தயார் நிலையில் வைத்து கொள்ளவும்.. இது போல் பென்சனரின் இறப்பை ரிபோர்ட் செய்பவரின் ரிபோர்ட் செய்பவர் பென்சனரின் மனைவியாகவோமகனாகவோமகளாகவோசகோதரசகோதரி யாகவோபெற்றோராகவோஅல்லது யாராகவும் (OTHERS), இருக்கலாம்அப்படி ரிபோர்ட் செய்பவரின் ஆதார்பான்பேங்க் பாஸ்புக் எல்லாம் ஸ்கேன் செய்து வைத்து கொள்ளவும். (மொபைல் எண் மெயில் ஐடி யும் தயராக வைத்து கொள்ளவும்.  ஸ்பார்ஷ் போர்ட்டலில் லாகின் செய்து செர்விஸஸ் கிளிக் செய்து திரையின் வலது கடைசியில் காணும் FAMILY HEAD ல் , REPORT EVENT / DEATH REPORTING கிளிக் செய்யவும்.  கேட்கும் தகவல்களை கொடுக்கவும்.  ஒன்றன் பின் ஒன்றாக  பென்சனர் டிடேல்ஸ்ரிபோர்ட்டர் டிடேல்ஸ்,  கிளைம் டிடேல்ஸ்க்ளைமன்ட் டிடேல்ஸ்எல்லாம் கொடுக்கவும்.  சில கேள்விகளுக்கு பதில் அளிக்கவும்பிறகு இறப்பு சான்று பதிவேற்றம் செய்ய சொல்லும்.  பதிவேற்றம் செய்யவும்.. பின் இறந்த தேதியும் இறப்புக்கான காரணமும் கேட்கும்.  .இறப்பு என்று பதிவு செய்யவும்..2வது மற்றும் 3வது தகவலில் மனைவி பற்றிய விபரங்கள் கேட்கும்.  அதன் பின் 4 வது தகவலில் வங்கி பற்றியதாக இருக்கும்இதை எல்லாம் கொடுத்த பின் ஸ்கேன் செய்து வைத்திருக்கும் ஆதார்,  பான்,  வங்கி பாஸ்புக்பதிவேற்றம் செய்யவும்.

இதன் பின் எல்லாம் சரியாக இருந்தால் உடனேயோ , அல்லது 10 அல்லது 15 நாள்களில்  மனைவின் கொடுக்கப்பட்ட கைபேசிக்கு ஒரு புதிய SMS வரும்.  அதில் ஸ்பார்ஷ் பிபிஒ,  ஸ்பார்ஷ் பிபிஒ வின் கடைசியில் 02 சேர்க்கபட்ட UN / USERID .இருக்கும்கூடவே, 10 எழுத்து /எண் அல்லது இரண்டும் கலந்த பாஸ்வர்ட் இருக்கும்.  இதை ஸ்பார்ஷ் போர்ட்டலில் உள்ளீடு செய்து வரும் திரையில் உங்களுக்கான ச்சாய்ஸ் (CHOICE)  பாஸ்வர்ட் உறுவாக்கவும் . பின் FAMILY பென்சனருக்கான எல்லா விபரங்களும் சரி பார்த்துதேவையான திருத்தங்களையும் செய்து கொள்ளவும். . பிறகு, MY DOCUMENT ல் கிளிக் செய்து  பென்சனர் பிபிஒகோரிஜெண்டம் பிபிஒபென்சன் ஸ்லிப் , ENTITLEMENT,  FORM 16, எல்லாம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்

xx

15  இவ்வாறாகஸ்பார்ஷ் என்னும் மின்னணு,, இணைய தளஆன் லைன் பென்சன் வழங்கும் வழி முறை மூலம் பென்சன் சம்பந்தப்பட்ட எந்த பணியும் தாமதமின்றி உடனே,  ஒற்றை சாளரம் முறை யில் நடை பெறுகிறது..  முன்பெல்லாம் வங்கிகளின் கட்டுப்பாட்டில் பென்சன் இருக்கும் போதுஒரு பிரச்சினையோடு வங்கிக்கு நாம் போனால் பொறுப்பற்ற முறையில் இது மேலிடத்தில் (CPPC) கேட்க வேண்டும்எங்களால் ஒன்றும் செய்ய முடியாதுஎன்று பதில் சொன்னது. அப்படியே ஏதாவது செய்தாலும் அந்த வேலை முடிய மாதக்கணக்கில் ஏன் வருடக்கணக்கில் கூட கால தாமதம் ஆனது.   ஒரு EXSM இறந்தால் அவரை சார்ந்தோர்,  ஃபேமிலி பென்சன் பெறுவதற்கு பல மாதங்கள் வருடங்கள் ஆனது.  இதனால் ஏற்பட்ட சிரமங்கள் சொல்லி மாளாதுஎனவே முன்னாள் ராணுவ வீரர்களின் பென்சன் வழங்கல்,  ஃபேமிலி பென்சன் வழங்கும் அனுமதி மற்றும் தேவையான டாட்டா வேலைகள் அனைத்தும் ஸ்பார்ஷ் மூலம் துரித கதியில் முடிக்கபடுகிறது என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை என்பது நிதர்சனமான உண்மை.. 

நன்றி           நன்றி                நன்றி           நன்றி 

 Source: https://exweltrust.blogspot.com/