Header Ads Widget

பட்டங்கள், சான்றிதழ்களில் ஆதார் எண்ணை அச்சிடக்கூடாது.. பல்கலைக்கழகங்களுக்கு தடை விதித்தது யுஜிசி

1500x900_1482384-ugc

 

கல்லூரிகளில் படிப்பை முடித்த மாணவர்களுக்கான பட்டங்கள் மற்றும் தற்காலிக சான்றிதழ்களில் மாணவர்களின் ஆதார் எண்ணை அச்சிடுவதற்கு பல்கலைக்கழகங்களுக்கு அனுமதி இல்லை என பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) தெரிவித்துள்ளது.

பல்கலைக்கழகங்களால் வழங்கப்படும் பட்டங்கள் மற்றும் தற்காலிக சான்றிதழ்களில் சம்பந்தப்பட்ட மாணவர்களின் ஆதார் எண்ணை அச்சிடுவதற்கு சில மாநில அரசுகள் பரிசீலனை செய்வதாக தகவல் வெளியான நிலையில், யுஜிசி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

இதுதொடர்பாக யுஜிசி செயலாளர் மணீஷ் ஜோஷி பல்கலைக்கழகங்களுக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார். உயர்கல்வி நிறுவனங்கள் ஆதார் ஆணைய விதிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி உள்ளார்.


Post a Comment

0 Comments