செப்டம்பர் 25 முதல் இந்த ரயில் நடைமுறைக்கு வருகிறது.

வண்டி எண் - 16361 & 16362, சங்கரன்கோவில் வழியாக இயங்க இருக்கும் எர்ணாகுளம் - வேளாங்கண்ணி வாரமிருமுறை விரைவு ரயில் கால அட்டவணை

செப்டம்பர் 25 முதல் இந்த ரயில் நடைமுறைக்கு வருகிறது.
முன்பதிவு தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

சிறப்பம்சங்கள் : 

♦️ தமிழக பயணிகள் சபரிமலை செல்ல இந்த ரயில் ஒரு சிறந்த ரயில்.
இந்த இரயிலில் பயணித்து புனலூரில்  இறங்கி அங்கிருந்து பேருந்து மூலம் சபரிமலை செல்லலாம்.

♦️ கேரளாவில் உள்ள பல சுற்றுலா தலங்களுக்கு செல்ல இந்த இரயில் சிறந்ததாக இருக்கும்.
♦️ தென்மாவட்டம்,டெல்டா மாவட்டம் மற்றும் கேரளா பக்தர்கள் வேளாங்கண்ணி, நாகூர் , திருநள்ளாறு மற்றும் திருவாரூர் , தென்காசி புனித தலங்களுக்கு செல்ல இந்த இரயிலை பயன் படுத்தலாம்.

♦️ இந்த இரயில் நிரந்தர இரயிலாக மாறுவதால் இனி இது சாதாரண விரைவு இரயில் கட்டணத்தில் இயங்கும்.
♦️ இந்த இரயில் அதிகாலை மற்றும் மாலை நேரத்தில் இருமார்கத்திலும் புனலூர் - செங்கோட்டை மலை மற்றும் வனப்பகுதியில் செல்வதால்.சுற்றுலா பயணிகளுக்கு இந்த இரயில் சிறந்த அனுபவத்தை தரும்.
நன்றி...பயணிகளுக்கு வாழ்த்துக்கள்..💐💐