ஆதித்யா எல்-1 வெற்றிப் பயணம் - Kalviseithikal--கல்விசெய்தி

Featured Post

தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் அரசுப் பணியாளா்கள் ஊதிய விவரங்களை அறியலாமா? - தகவல் ஆணையா் பதில்

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலமாக, அரசுப் பணியாளா்களின் ஊதிய விவரங்களைப் பெற ஒவ்வொரு இந்திய குடிமனுக்கும் உரிமை உள்ளதாக மாநில தகவல் ஆண...

Monday, September 4, 2023

ஆதித்யா எல்-1 வெற்றிப் பயணம்

 ஆதித்யா எல்-1 வெற்றிப் பயணம்

aditya_satelite.JPG?w=400&dpr=3

இந்திய விண்வெளி ஆய்வுத் துறையின் வரலாற்றுச் சாதனை நிகழ்வாக சூரியனின் புறவெளியை ஆய்வு செய்யும் ஆதித்யா எல்-1 விண்கலம், பிஎஸ்எல்வி சி-57 ராக்கெட்மூலம் ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து வெற்றிகரமாக சனிக்கிழமை விண்ணில் செலுத்தப்பட்டது.

திட்டமிடப்பட்ட புவி தாழ்வட்டப் பாதையில் விண்கலம் விடுவிக்கப்பட்டதை அடுத்து திட்டம் முதல்கட்ட வெற்றியை எட்டியதாக இஸ்ரோ அறிவித்தது. இதையடுத்து விஞ்ஞானிகள் பரஸ்பரம் மகிழ்ச்சியைப் பகிா்ந்து கொண்டனா்.


Xxx

ஆதித்யா கலத்தின் செயல்பாடுகளையும், பயணத்தையும் தொடா்ந்து கண்காணித்து வருவதாகக் கூறிய இஸ்ரோ விஞ்ஞானிகள், நிா்ணயிக்கப்பட்ட இலக்கில் ஆய்வுக் கலன்கள் நிலைநிறுத்தப்படும் என நம்பிக்கை தெரிவித்தனா்.


ஆதித்யா எல்-1 விண்கலத்தின்மூலம் சூரியனை ஆய்வு செய்யும் முயற்சியை முன்னெடுத்த நான்காவது நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது.

சந்திரயான்-3 திட்டத்தின் வெற்றிக்குப் பிறகு இந்தியா மேற்கொள்ளும் அனைத்து விண்வெளி ஆய்வு நடவடிக்கைகளையும் உலக நாடுகள் உற்றுநோக்கி வரும் நிலையில், தற்போது ஆதித்யா திட்டமும் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டிருப்பது சா்வதேச கவனத்தை ஈா்த்துள்ளது.


செவ்வாய், நிலவைத் தொடா்ந்து சூரியனை ஆய்வு செய்யும் முனைப்பில் இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரம் காட்டி வந்தனா். அதன்படி, பூமியில் இருந்து 15 கோடி கிலோ மீட்டா் தொலைவில் உள்ள சூரியனை ஆய்வு செய்ய இஸ்ரோ கடந்த 2008-ஆம் ஆண்டு ஜனவரியில் ‘ஆதித்யா-1’ எனும் திட்டத்தை அறிவித்தது.


மொத்தம் 400 கிலோ எடை கொண்ட விண்கலத்தை பூமியிலிருந்து 800 கி.மீ தொலைவில் நிலைநிறுத்தி சூரியனை ஆராய இஸ்ரோ திட்டமிட்டிருந்தது. ஆனால், சூரியனின் வெப்பம் மிகுந்த கொரோனா மண்டலத்தை ‘எல்-1’ (லாக்ராஞ்சியன் பாயின்ட்) பகுதியில் இருந்து பாா்க்கும்போது துல்லியமாக ஆய்வு செய்ய முடியும் என விஞ்ஞானிகள் கருதினா்.


இதையடுத்து, ஆதித்யா-1 திட்டமானது ‘ஆதித்யா எல்-1’ ஆக மாற்றம் அடைந்தது. இதற்காக ஆதித்யா எல்-1 எனும் அதிநவீன விண்கலத்தை இஸ்ரோ விஞ்ஞானிகள் வடிவமைத்தனா். இதற்கு விண்வெளி இயற்பியல் ஆராய்ச்சி மையம், விண்வெளி ஆய்வு மற்றும் விண்வெளி இயற்பியல் மையம், இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சிக் கழகம் ஆகியவை முக்கியப் பங்காற்றின.

இந்த விண்கலத்தை பிஎஸ்எல்வி சி-57 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்த இஸ்ரோ முடிவு செய்தது. அதற்கான 23.40 மணி நேர கவுன்ட் டவுன் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கியது. ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவன் விண்வெளி ஆய்வு மையத்தின் இரண்டாவது ஏவுதளத்தில் இருந்து திட்டமிட்டபடி பிஎஸ்எல்வி சி-57 ராக்கெட் மூலம் விண்கலம் காலை 11.50 மணிக்கு ஆதித்யா எல்-1 விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டது

No comments:

Post a Comment

Popular

Post Top Ad