Header Ads Widget

NEET UG 2023 Counselling: நீட் கவுன்சலிங்; தமிழகத்தில் இதுவரை 30,000 பேர் விண்ணப்பம்;


NEET UG 2023 Counselling: நீட் கவுன்சலிங்; தமிழகத்தில் இதுவரை 30,000 பேர் விண்ணப்பம்;

 எம்.பி.பி.எஸ் சீட் அதிகரிக்க வாய்ப்பு
நீட் கவுன்சிலிங்; எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் மாணவர் சேர்க்கைக்கு 30000 பேர் விண்ணப்பம்;

 மாற்றுதிறனாளி மாணவர்களுக்கு சலுகை
 
  மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு (பிரதிநிதித்துவ படம்)
தமிழகத்தில் எம்.பி.பி.எஸ் படிப்புகளில் சேர்க்கை பெறுவதற்கு விண்ணப்பிக்க கடைசி தேதி நெருங்கி வரும் நிலையில், இதுவரை 30000 மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர்.

தமிழ்நாட்டில் அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் உள்ள எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். படிப்புகளுக்கு நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. இந்த ஆண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு ஜூன் 29 ஆம் தேதி தொடங்கியது. ஜூலை 10 விண்ணப்பிக்க கடைசி தேதி ஆகும்.

நீட் தேர்வில் தகுதிப் பெற்ற மாணவர்கள் ஆர்வத்துடன் விண்ணப்பித்து வருகின்றனர். இதுவரை 30000க்கும் அதிகமானோர் விண்ணப்பித்துள்ளனர்.  வருகிற 15 ஆம் தேதி அகில இந்திய ஒதுக்கீட்டிற்கான மருத்துவ கலந்தாய்வு தொடங்கப்பட உள்ளதால், விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்க வாய்ப்பு இல்லை.

இந்தநிலையில், கடந்த ஆண்டை விட இந்த வருடம் கூடுதலாக மருத்துவ இடங்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. மேலும் அரசு பள்ளியில் படித்த மாணவர்களில் 500க்கும் மேற்பட்டோருக்கு மருத்துவ இடங்கள் ஒதுக்கப்பட உள்ளது.
குறிப்பிட்ட காலத்திற்குள் விண்ணப்பங்கள் பெறப்பட்டு பரிசீலனை செய்து சீட் மேட்ரிக்ஸ் தயாரிக்கப்பட்டு ரேங்க் பட்டியல் வெளியிடப்பட வேண்டும். அதற்கான பணிகள் நிறைவடைய ஒரு வாரம் ஆகலாம். அதனால் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் மருத்துவ கலந்தாய்வு இந்த மாத இறுதியில் தொடங்க வாய்ப்பு இருப்பதாக மருத்துவ சேர்க்கை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையில் மாற்றுத்திறனாளி மாணவர்கள் விண்ணப்பிக்க தகுதி சான்றிதழ் பெறுவதில் தாமதம் ஏற்படுவதால் கலந்தாய்வுக்கு முன்னதாக சான்றிதழ் வழங்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய மருத்துவ ஆணைய போர்ட்டலில் பதிவு செய்ய முடியாத நிலை தற்போது உள்ளதால் கலந்தாய்விற்கு முன்னதாக ஒப்படைக்க வேண்டும் என்று தளர்வு அளிக்கப்பட்டுள்ளது

Post a Comment

0 Comments