இனி Gpay, Phonepe மூலம் ATM இல் பணம் எடுக்கலாம்? டெபிட் கார்டு தேவையில்ல!!!

இனி Gpay, Phonepe மூலம் ATM இல் பணம் எடுக்கலாம்? டெபிட் கார்டு தேவையில்ல!!!
இனி Gpay, Phonepe மூலம் ATM இல் பணம் எடுக்கலாம்? டெபிட் கார்டு தேவையில்ல!!!
நாடு முழுவதும் டிஜிட்டல் தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்து வருவதால் நடைபாதை கடைகளில் கூட UPI போர்டு வைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக Gpay, Phonepe உள்ளிட்ட UPI செயலிகள் மூலம் பண பரிமாற்றங்கள் அதிக அளவில் நடைபெற்று வருகிறது. இருந்தாலும் ஒரு சில இடங்களில் பணத்தேவைகள் ஏற்படுவதால் டெபிட் கார்டு வைத்து ATM மையத்தில் பணம் எடுக்க வேண்டியுள்ளது.

இந்நேரங்களில் டெபிட் கார்டு இல்லாமல் பலரும் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர். இந்நிலையில் டெபிட் கார்டு இல்லாமல் ATMல் பணம் எடுக்கும் ICCW வசதியை பேங்க் ஆப் பரோடா அறிமுகப்படுத்தி உள்ளது. அதாவது இந்நிறுவன வங்கி ATM ல் “UPI கேஷ் வித்டிராவல்” என்ற ஆப்ஷன் உள்ளது. இதனை கிளிக் செய்து திரையில் தோன்றும் QR கோட் ஸ்கேன் செய்து தேவைப்படக்கூடிய பணத்தை Withdraw செய்யலாம்.

ஜூன் 29 ஆம் தேதி இந்த பகுதிக்கு பொது விடுமுறை.., வெளியான சூப்பர் அறிவிப்பு !!!

இந்த வசதி பேங்க் ஆப் பரோடா வாடிக்கையாளர்களுக்கு மட்டுமல்லாமல் மற்ற வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்களும் பயன்படுத்தி கொள்ளலாம். இதற்கு தங்களது மொபைலில் ICCWயை எனேபிள் செய்திருக்க வேண்டும். ஒரு நாளைக்கு அதிகபட்சம் ரூ.5,000 வீதம் இருமுறை இந்த UPI பரிவர்த்தனை மேற்கொள்ளலாம் எனவும் அறிவுறுத்தி உள்ளனர்.