ஆதார் கார்டு வச்சுருக்கீங்களா? அப்போ முதல்ல இதை பண்ணுங்க.. அரசின் உத்தரவு!
ஆதார் கார்டு வச்சுருக்கீங்களா? அப்போ முதல்ல இதை பண்ணுங்க.. அரசின் உத்தரவு!
இந்தியாவில் ஆதார் கார்டில் விவரங்களை ஆன்லைன் வாயிலாக இலவசமாக மாற்றி கொள்ள மத்திய ஆதார் அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது. இதற்கென வழங்கப்பட்ட கால அவகாசம் தற்போது நிறைவுக்கு வந்துள்ளது.
அரசின் உத்தரவு:
இந்தியாவில் அனைத்து அரசு மற்றும் தனியார் துறை சம்பந்தப்பட்ட அனைத்து வேலைகளுக்கு ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனால் ஆதார் அட்டை தாரர்கள் ஆதார் கார்டில் எப்போதும் விவரங்களை சரியாக வைத்து கொள்ள வேண்டும். இனி ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆதார் கார்டை அப்டேட் செய்ய வேண்டும் என்று மத்திய ஆதார் அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் நாளை (ஜூன் 16) மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
அண்மையில் ஆதாரில் உள்ள பெயர் மற்றும் முகவரியை ஆன்லைன் வாயிலாக எவ்வித கட்டணமும் இல்லாமல் ஜூன் 14ம் தேதி வரை மாற்றி கொள்ளும் வசதியை ஆதார் அமைப்பு வழங்கியது. இந்த சலுகையை பயன்படுத்தி ஏராளமானோர் ஆதார் கார்டில் முகவரியை மாற்றினர்.
தற்போது வழங்கப்பட்ட கால அவகாசம் நேற்றுடன் முடிவடைந்த நிலையில் இனி ஆதார் கார்டை அப்டேட் செய்ய விரும்புபவர்கள் ரூ. 50 கட்டணம் செலுத்த வேண்டும்
0 Comments