ஆதார் கார்டுக்கு கெடு! கூகுள் பே, போன் பே வெரிஃபிகேஷன்? மத்திய அரசின் திட்டம் என்ன?
ஆதார் (Aadhaar) கார்டில் கொடுக்கப்பட்ட பெயர், முகவரி, மொபைல் நம்பர், இமெயில் விவரங்கள் தவறாக இருப்பின் வரும் காலங்களில், கூகுள் பே, போன் பே போன்ற ஆப்களை பயன்படுத்த முடியாமல் போகலாம். இந்த சூழலில், மத்திய அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் கோடிக்கணக்கான மக்களின் முக்கிய அடையாள சான்றாகவும், அரசின் சலுகைகளை பெறவும் நாம் பயன்படுத்திவருவது ஆதார் கார்டுகளையே. இந்த கார்டுகளில் ஏற்படும் சிக்கல்களை தவிர்க்க, இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. ஆதார் கார்டு வைத்திருக்கும் ஒவ்வொருவரும் அதில் கொடுத்திருக்கும் விவரங்கள் சரியாக உள்ளதா என்பதில் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும்.
எதிர்பாராதவிதமாக தவறான விவரங்களை கொடுத்துவிட்டால், அதனை முடிந்த வரையில் விரைவாக மாற்றிவிட வேண்டும். அப்படியில்லை என்றால், பின்னாளில் கட்டாயம் பிரச்சனைகள் வரும். இதுவரை, ஆதார் கார்டில் ஆன்லைன் மூலம் மொபைல் நம்பர் மாற்றுதல் (Aadhaar Card Mobile Number Change), ஆதார் கார்டு பெயர் மாற்றுதல் (Aadhaar Card Name Change), ஆதார் கார்டு முகவரி மாற்றுதல் ((Aadhaar Card Address Change), ஆதார் கார்டு இமெயில் மாற்றுதல் (Aadhaar Card Email Change) ஆகியவற்றிக்கு ரூ.50 வசூலிக்கப்பட்டு வந்தது.
இதனால், தவறான விவரங்களை மாற்றுவதில் பெரும்பாலான மக்களிடையே சற்று சுணக்கம் ஏற்பட்டுவந்தது. இதன் காரணமாக, இந்திய தனித்துவ அடையாள ஆணையம், அதிரடி சலுகைகளை வழங்க முடிவு செய்தது. அதன்படி, ஆன்லைனில் ஆதார் அட்டை விவரங்களை மாற்ற விரும்பும் மக்கள், ஜூன் 14ஆம் தேதி வரையில், இலவசமாக மாற்றிக் கொள்ளலாம் என்று அறிவித்தது
இந்த அவகாசம் நேற்று முன்தினம் (ஜூன் 14) முடிந்தது.
இதனால், இந்த தேதிக்கு பின் ஆதார் கார்டில் மாற்றம் செய்வோருக்கு ரூ.50 வசூலிக்கப்பட்ட வந்த நிலையில், இப்போது, அதிரடி அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.
அதாவது, வரும் செப்டம்பர் 14ஆம் தேதி வரையில் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த மூலம் மேலும் 3 மாதங்களுக்கு இலவசமாக ஆதார் கார்டுகளில் அப்டேட் செய்துகொள்ள முடியும்.
ஆகவே, குழந்தைகளுக்கு ஆதார் கார்டுகளை வாங்கிய பெற்றோர்கள், அவர்களுக்கு 15 வயது எட்டியிருப்பின், உடனடியாக ஆதார் கார்ட்டில் பயோமெட்ரிக்ஸ் விவரங்களையும் புதுப்பிக்க வேண்டும். அதேபோல, ஆதார் கார்டில் பெயர், முகவரி, பிறந்த தேதி, பாலினம், மொபைல் நம்பர், இமெயில் ஆகியவற்றை புதுப்பிக்க வேண்டியவர்கள், செய்து முடித்துவிடுங்கள்.
வரும் காலங்களில் கூகுள் பே, போன் பே போன் ஆப்களின் வெரிஃபிகேஷன்களுக்கு ஆதார் கார்டு கட்டாயமாக்கப்படலாம். ஏனென்றால், அண்மையில், கூகுள் பே ஆப்பில் ஆதார் வெரிபிகேஷன் கொண்டுவரப்பட்டது.
இதைத்தொடர்ந்து போன் பே, பேடிஎம் போன்ற ஆப்களிலும் வெரிஃபிகேஷன் கொண்டுவரப்பட வாய்ப்புள்ளது. ஆகவே, ஆதார் கார்டில் எந்த குளறுபடியும் இல்லாமல் பார்த்துகொள்வது நல்லது.
ஆதார் கார்டு விவரங்களை அப்டேட் செய்வது எப்படி?
இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் (UIDAI website) அதிகாரப்பூர்வ வெப்சைட்டுக்கு சென்று (Update Your Aadhaar) மூலம் நீங்கள் மாற்ற வேண்டிய விவரங்களை அப்டேட் செய்துகொள்ளலாம். இதற்கு உங்களது ஆதார் கார்டு, மொபைல் நம்பருடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். அப்போதுதான் ஓடிபி கொடுத்து விவரங்களை மாற்ற முடியும். நீங்கள் அப்டேட் செய்த பின்பு 15 வேலை நாட்களுக்குள் புதுப்பிக்கப்பட்டுவிடும்செய்வோருக்கு ரூ.50 வசூலிக்கப்பட்ட வந்த நிலையில், இப்போது, அதிரடி அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.
அதாவது, வரும் செப்டம்பர் 14ஆம் தேதி வரையில் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த மூலம் மேலும் 3 மாதங்களுக்கு இலவசமாக ஆதார் கார்டுகளில் அப்டேட் செய்துகொள்ள முடியும்.
ஆகவே, குழந்தைகளுக்கு ஆதார் கார்டுகளை வாங்கிய பெற்றோர்கள், அவர்களுக்கு 15 வயது எட்டியிருப்பின், உடனடியாக ஆதார் கார்ட்டில் பயோமெட்ரிக்ஸ் விவரங்களையும் புதுப்பிக்க வேண்டும். அதேபோல, ஆதார் கார்டில் பெயர், முகவரி, பிறந்த தேதி, பாலினம், மொபைல் நம்பர், இமெயில் ஆகியவற்றை புதுப்பிக்க வேண்டியவர்கள், செய்து முடித்துவிடுங்கள்.
வரும் காலங்களில் கூகுள் பே, போன் பே போன் ஆப்களின் வெரிஃபிகேஷன்களுக்கு ஆதார் கார்டு கட்டாயமாக்கப்படலாம். ஏனென்றால், அண்மையில், கூகுள் பே ஆப்பில் ஆதார் வெரிபிகேஷன் கொண்டுவரப்பட்டது.
இதைத்தொடர்ந்து போன் பே, பேடிஎம் போன்ற ஆப்களிலும் வெரிஃபிகேஷன் கொண்டுவரப்பட வாய்ப்புள்ளது. ஆகவே, ஆதார் கார்டில் எந்த குளறுபடியும் இல்லாமல் பார்த்துகொள்வது நல்லது.
ஆதார் கார்டு விவரங்களை அப்டேட் செய்வது எப்படி?
இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் (UIDAI website) அதிகாரப்பூர்வ வெப்சைட்டுக்கு சென்று (Update Your Aadhaar) மூலம் நீங்கள் மாற்ற வேண்டிய விவரங்களை அப்டேட் செய்துகொள்ளலாம். இதற்கு உங்களது ஆதார் கார்டு, மொபைல் நம்பருடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். அப்போதுதான் ஓடிபி கொடுத்து விவரங்களை மாற்ற முடியும். நீங்கள் அப்டேட் செய்த பின்பு 15 வேலை நாட்களுக்குள் புதுப்பிக்கப்பட்டுவிடும்.
அதன்பின், நீங்கள் ஆதார் கார்ட்டை ஆன்லைனில் டவுன்லோட் (Aadhaar Card Download) செய்துகொள்ளலாம் அல்லது உங்களது முகவரிக்கு அனுப்ப விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம்.
0 Comments