10 ஆண்டுகளுக்கு முன்பு வழங்கப்பட்ட ஆதாரை பெற்றவரா நீங்கள்: உடனே இதை செய்யுங்கள்
10 ஆண்டுகளுக்கு முன்பு ஆதார் அட்டையைப் பெற்றவர்கள், தங்களுடைய ஆதார் விவரங்களை உடனடியாக புதுப்பித்துக் கொள்ள வேண்டும்
10 வருடங்களுக்கு ஒருமுறை ஆதார் தகவல்களை புதுப்பிக்க வேண்டும் என்று இந்திய தனித்துவ அடையாள ஆணையம் தெரிவித்துள்ளது.
ஆதார் அட்டை வழங்கப்பட்ட தேதியில் இருந்து, ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கும் ஒருமுறை உங்கள் ஆதார் தகவல்களைப் புதுப்பிக்க வேண்டும். இதன் மூலம் பொது அடையாள தரவு சேகரிப்பு மையத்தில் உங்களைப் பற்றிய தகவல்கள் சரியானதாகவும் துல்லியமானதாகவும் இருக்கும் என்று கூறப்படுகிறது.
நீங்கள் ஆவணங்களை புதுப்பிப்பதற்காகவே UIDAI இல் ஒரு சிறப்பு அம்சம் சேர்க்கப்பட்டுள்ளது. உங்களுடைய Myaadhaar போர்ட்டல் அல்லது Myaadhaar என்ற செயலியில் updatedocument என்ற அம்சத்தை பயன்படுத்தி நீங்கள் ஆவணங்களை புதுப்பித்துக் கொள்ளலாம். உங்களுக்கு ஆன்லைனில் ஆவணங்களை எப்படி புதுப்பிக்க வேண்டும் என்பது பற்றி சரியாகத் தெரியவில்லை என்றால், நீங்கள் அருகிலுள்ள ஆதார் சேவை மையத்திற்கு சென்று ஆவணங்களின் நகலை வழங்கி, ஆதார் அட்டையை புதுப்பித்துக் கொள்ளலாம்
ஜூன் 14 வரை ஆதார் அட்டை விவரங்களை இணையம் மூலம் இலவசமாக புதுப்பிக்கலாம். இந்த சேவையை மைஆதார் ‘myAadhaar’ எனும் இணையத்தில் மட்டுமே இலவசமாகப் பெற முடியும். ஆதார் மையங்களில் நேரடியாக சென்று புதுபித்தால் வழக்கம்போல் ரூ.50/- கட்டணமாக வசூலிக்கப்படும்.
பயனாளர்கள் https://myaadhaar.uidai.gov.in/ எனும் இணையத்தில் தங்கள் ஆதார் எண்ணைப் பயன்படுத்தி தங்களின் தரவுகளை புதுப்பித்துக்கொள்ளலாம். ஏற்றுக்கொள்ளக்கூடிய முகவரி மற்றும் அடையாள ஆவணங்களின் பட்டியல் இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கிடைக்கிறது
0 Comments