​தமிழ்நாடு அரசு ஓய்வூதியதாரர்கள் ஆண்டு முழுவதும் தங்களது வாழ்நாள் சான்றிதழ் சமர்ப்பிக்க புதிய வசதி. - Kalviseithikal--கல்விசெய்தி

Featured Post

தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் அரசுப் பணியாளா்கள் ஊதிய விவரங்களை அறியலாமா? - தகவல் ஆணையா் பதில்

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலமாக, அரசுப் பணியாளா்களின் ஊதிய விவரங்களைப் பெற ஒவ்வொரு இந்திய குடிமனுக்கும் உரிமை உள்ளதாக மாநில தகவல் ஆண...

Sunday, May 28, 2023

​தமிழ்நாடு அரசு ஓய்வூதியதாரர்கள் ஆண்டு முழுவதும் தங்களது வாழ்நாள் சான்றிதழ் சமர்ப்பிக்க புதிய வசதி.

​தமிழ்நாடு அரசு ஓய்வூதியதாரர்களுக்கு பெரிய நிம்மதி.. வருகிறது புதிய வசதிகள்!

தமிழ்நாடு அரசு ஓய்வூதியதாரர்கள் ஆண்டு முழுவதும் தங்களது வாழ்நாள் சான்றிதழ் சமர்ப்பிக்க புதிய வசதி.
தமிழ்நாடு அரசு ஓய்வூதியதாரர்கள் ஆண்டு முழுவதும் எப்போது வேண்டுமனாலும் நேர்காணல் செய்ய வழிவகை செய்யப்படும் என தமிழ்நாடு நிதித் துறை அண்மையில் தெரிவித்துள்ளது. இதனால் அரசு ஓய்வூதியதாரர்கள் எப்படி பயன்பெறுவார்கள் என்பதை விரிவாக பார்க்கலாம்.
வாழ்நாள் சான்றிதழ்
 
ஓய்வூதியதாரர்கள் அனைவரும் ஆண்டுக்கு ஒருமுறை வாழ்நாள் சான்றிதழ் (Life certificate) சமர்ப்பிக்க வேண்டும். வாழ்நாள் சான்றிதழ் என்பது ஒரு ஓய்வூதியதாரர் இன்னும் உயிருடன் இருக்கிறார் என்பதற்கான சான்று ஆகும். இதுபோக ஓய்வூதியர் நேர்காணல் வழியாகவும் அவர் உயிருடன் இருப்பதை உறுதி செய்யலாம்.
தமிழ்நாடு அரசு ஓய்வூதியதாரர்களுக்கு கடைசி தேதி
 
தற்போது ஒவ்வொரு ஆண்டும் ஜூலை முதல் செப்டம்பர் வரை தமிழ்நாடு அரசு ஓய்வூதியதாரர்களுக்கான நேர்காணல் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன்படி செப்டம்பர் மாதத்துக்குள் ஓய்வூதியதாரர்கள் தங்களது வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும்.
புதிய வசதி
 
இந்நிலையில், தமிழ்நாடு அரசு ஓய்வூதியதாரர்கள் ஆண்டு முழுவதும் ஓய்வூதியதாரர் நேர்காணல் மேற்கொள்ள வழிவகை செய்யப்படும் என தமிழ்நாடு நிதித் துறை அண்மையில் அறிவிப்பு வெளியிட்டது. இது லட்சக்கணக்கான தமிழ்நாடு அரசு ஓய்வூதியதாரர்களுக்கு நிவாரணம் அளிக்கும் அறிவிப்பாக வெளிவந்துள்ளது.
ஓய்வூதியதாரர்களுக்கு மொபைல் ஆப்
 
இதுமட்டுமல்லாமல் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு புதிய மொபைல் ஆப் அறிமுகப்படுத்தப்படும் எனவும் தமிழ்நாடு நிதித் துறை அண்மையில் அறிவித்துள்ளது. இதில் ஓய்வூதியதாரர்கள் எளிதில் பல்வேறு சேவைகளை மொபைல் வழியாகவே பெற்றுக்கொள்ளலாம்.
ஓய்வூதியதாரர்களுக்கான வசதிகள்
 
தமிழ்நாடு அரசு ஓய்வூதியதாரர்களுக்கான மொபைல் ஆப் வழியாக ஓய்வூதியச்சீட்டு, ஓய்வூதியம் பெறப்பட்ட விவரங்கள், படிவம் 16 (Form 16) ஆகியவற்றை பதிவிறக்கம் செய்யலாம். மேலும் வாரிசுதாரர்களின் விவரங்களை பதிவேற்றம் செய்யவும் இந்த மொபைல் ஆப் பயன்படுத்தலாம்.
    

No comments:

Post a Comment

Popular

Post Top Ad