பான் - ஆதார் இணைக்க யாருக்கெல்லாம் விலக்கு... முழு விவரங்கள் இதோ..
பான் எண்ணுடன் ஆதாரை இணைக்கச் சிலருக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதற்குத் தகுதியானவர்கள் யார் என்பதையும், பான் எண்ணுடன் ஆதார் இணைக்கப்பட்டுள்ளதா என்பதை எப்படி சரிபார்க்கலாம் என்பதைப் பற்றி இந்த தொகுப்பில் தெரிந்துகொள்ளுவோம்.
மத்திய அரசு பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்பதை கட்டாயமாக்கியுள்ளது. மேலும் இதற்கான கால அவகாசம் நேற்றுடன் முடிவடைந்துள்ளது. இந்த நிலையில், சிலர் மட்டும் ஆதார் எண்ணை பான் எண்ணுடன் இணைக்க வேண்டியது இல்லை என்று கூறப்படுகிறது. மேலும், இவர்கள் ஆதார் எண்ணை இணைக்க விரும்பினால் எந்த வித கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை என கூறப்பட்டுள்ளது. யாருக்கெல்லாம் இது பொருந்தும் என்று பார்க்கலாம்.
ஆதார் அட்டையுடன் பான் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடு நேற்றுடன் முடிவடைந்துள்ளது. பான் எண்ணை ஆதார் எண்ணுடன் இணைப்பதற்கு சிலருக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. எனவே, வருமான வரி (I-T) சட்டத்தின் பிரிவு 139AA இன் துணைப் பிரிவு (3) இன் விதிகளின் கீழ் அவர்களின் ஆதார் எண்ணை பான் அட்டையுடன் இணைக்காமல் இருந்தாலும், விலக்கு அளிக்கப்பட்டதன் காரணமாக அவர்களின் PAN அட்டை செயலிழக்காது.
பான் என்பது தனிநபர்கள் மற்றும் வணிக வரி நோக்கங்களுக்காக வழங்கப்படும் தனிப்பட்ட எண் ஆகும். இருப்பினும், அனைத்து இந்திய குடிமக்களும் தனிப்பட்ட 12 இலக்க ஆதார் எண்ணை வைத்திருக்க வேண்டும். நிதி பரிவர்த்தனைகளை எளிதாக்க பான் மற்றும் ஆதார் கார்டுகளை இணைப்பதை வருமான வரித்துறை தற்போது கட்டாயம் ஆக்கியுள்ளது.
ஆதார்-பான் இணைப்பை இணைப்பதில் இருந்து விலக்கு பெறுபவர்கள் யார்? அசாம், ஜம்மு காஷ்மீர், மேகாலயா மாநிலங்களில் வசிப்பவர்கள், I-T சட்டம், 1961 இன் படி குடியுரிமை பெறாதவர்கள், முந்தைய ஆண்டில் எந்த நேரத்திலும் 80 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட நபர்கள் மற்றும் இந்திய குடிமக்கள் அல்லாதவர்கள் ஆதார் பான் எண்ணை இணைக்கத் தேவையில்லை.
இவர்களுள் பான் எண்ணுடன் ஆதாரை தானாக முன்வந்து இணைக்க விரும்புபவர்கள் கட்டணம் செலுத்தத் தேவையில்லை. மேலும், வழங்கப்பட்டுள்ள இந்த விலக்குகள் எப்போது வேண்டுமானாலும் மாற்றி அமைக்கப்படலாம் என்பதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும்.
எனவே, உங்கள் பான்-ஆதார் ஏற்கனவே இணைக்கப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்க விரும்பினால், வருமான வரியின் இ-ஃபைலிங் இணையதளத்தைப் பார்வையிடவும். https://www.incometax.gov.in/iec/foportal/ இணையதளத்தில், 'விரைவு இணைப்புகள்' (Quick Links) என்ற பக்கத்திற்குச் செல்லவும். இதில் உங்களுக்கு தேவையான தகவல்கள் அனைத்தும் வழங்கப்பட்டிருக்கும். அதனைப் பின்பற்றி சரிப்பார்த்துகொள்ளலாம்.
உங்கள் பான்-ஆதார் இணைப்பை குறுந்தகவல் மூலமாகவும் சரிபார்க்கலாம். அவ்வாறு செய்ய, நீங்கள் 567678 அல்லது 56161 என்ற எண்ணுக்கு SMS பான் - ஆதார் இணைக்க யாருக்கெல்லாம் விலக்கு... முழு விவரங்கள் இதோ..
வேண்டும். UIDPAN என்று டைப் செய்து, உங்கள் ஆதார் எண்ணை உள்ளிட வேண்டும். பின்னர் ஒரு இடைவெளி விட்டு பான் எண்ணை உள்ளிட வேண்டும் (UIDPAN AADHAAR NO PAN NO). நீங்கள் அவ்வாறு செய்தவுடன், பான்-ஆதார் இணைப்பு நிலை குறித்த தகவலை குறுந்தகவல் வாயிலாக தெரிந்து கொள்வீர்கள்.
பான் எண்ணுடன் ஆதாரை இணைக்கச் சிலருக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதற்குத் தகுதியானவர்கள் யார் என்பதையும், பான் எண்ணுடன் ஆதார் இணைக்கப்பட்டுள்ளதா என்பதை எப்படி சரிபார்க்கலாம் என்பதைப் பற்றி இந்த தொகுப்பில் தெரிந்துகொள்ளுவோம்.
மத்திய அரசு பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்பதை கட்டாயமாக்கியுள்ளது. மேலும் இதற்கான கால அவகாசம் நேற்றுடன் முடிவடைந்துள்ளது. இந்த நிலையில், சிலர் மட்டும் ஆதார் எண்ணை பான் எண்ணுடன் இணைக்க வேண்டியது இல்லை என்று கூறப்படுகிறது. மேலும், இவர்கள் ஆதார் எண்ணை இணைக்க விரும்பினால் எந்த வித கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை என கூறப்பட்டுள்ளது. யாருக்கெல்லாம் இது பொருந்தும் என்று பார்க்கலாம்.
ஆதார் அட்டையுடன் பான் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடு நேற்றுடன் முடிவடைந்துள்ளது. பான் எண்ணை ஆதார் எண்ணுடன் இணைப்பதற்கு சிலருக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. எனவே, வருமான வரி (I-T) சட்டத்தின் பிரிவு 139AA இன் துணைப் பிரிவு (3) இன் விதிகளின் கீழ் அவர்களின் ஆதார் எண்ணை பான் அட்டையுடன் இணைக்காமல் இருந்தாலும், விலக்கு அளிக்கப்பட்டதன் காரணமாக அவர்களின் PAN அட்டை செயலிழக்காது.
பான் என்பது தனிநபர்கள் மற்றும் வணிக வரி நோக்கங்களுக்காக வழங்கப்படும் தனிப்பட்ட எண் ஆகும். இருப்பினும், அனைத்து இந்திய குடிமக்களும் தனிப்பட்ட 12 இலக்க ஆதார் எண்ணை வைத்திருக்க வேண்டும். நிதி பரிவர்த்தனைகளை எளிதாக்க பான் மற்றும் ஆதார் கார்டுகளை இணைப்பதை வருமான வரித்துறை தற்போது கட்டாயம் ஆக்கியுள்ளது.
ஆதார்-பான் இணைப்பை இணைப்பதில் இருந்து விலக்கு பெறுபவர்கள் யார்? அசாம், ஜம்மு காஷ்மீர், மேகாலயா மாநிலங்களில் வசிப்பவர்கள், I-T சட்டம், 1961 இன் படி குடியுரிமை பெறாதவர்கள், முந்தைய ஆண்டில் எந்த நேரத்திலும் 80 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட நபர்கள் மற்றும் இந்திய குடிமக்கள் அல்லாதவர்கள் ஆதார் பான் எண்ணை இணைக்கத் தேவையில்லை.
இவர்களுள் பான் எண்ணுடன் ஆதாரை தானாக முன்வந்து இணைக்க விரும்புபவர்கள் கட்டணம் செலுத்தத் தேவையில்லை. மேலும், வழங்கப்பட்டுள்ள இந்த விலக்குகள் எப்போது வேண்டுமானாலும் மாற்றி அமைக்கப்படலாம் என்பதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும்.
எனவே, உங்கள் பான்-ஆதார் ஏற்கனவே இணைக்கப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்க விரும்பினால், வருமான வரியின் இ-ஃபைலிங் இணையதளத்தைப் பார்வையிடவும். https://www.incometax.gov.in/iec/foportal/ இணையதளத்தில், 'விரைவு இணைப்புகள்' (Quick Links) என்ற பக்கத்திற்குச் செல்லவும். இதில் உங்களுக்கு தேவையான தகவல்கள் அனைத்தும் வழங்கப்பட்டிருக்கும். அதனைப் பின்பற்றி சரிப்பார்த்துகொள்ளலாம்.
உங்கள் பான்-ஆதார் இணைப்பை குறுந்தகவல் மூலமாகவும் சரிபார்க்கலாம். அவ்வாறு செய்ய, நீங்கள் 567678 அல்லது 56161 என்ற எண்ணுக்கு SMS அனுப்ப வேண்டும். UIDPAN என்று டைப் செய்து, உங்கள் ஆதார் எண்ணை உள்ளிட வேண்டும். பின்னர் ஒரு இடைவெளி விட்டு பான் எண்ணை உள்ளிட வேண்டும் (UIDPAN AADHAAR NO PAN NO). நீங்கள் அவ்வாறு செய்தவுடன், பான்-ஆதார் இணைப்பு நிலை குறித்த தகவலை குறுந்தகவல் வாயிலாக தெரிந்து கொள்வீர்கள்.
0 Comments