ரேஷன் கார்டு வைத்திருப்போருக்கு மிகப் பெரிய நிம்மதி.. இன்னும் 3 மாதம் அவகாசம்!
அடேங்கப்பா.. இப்படியொரு அறிவிப்பா!! மகிழ்ச்சியில் குடும்ப அட்டைதாரர்கள்!
ரேஷன் கார்டை ஆதாருடன் இணைப்பதற்கான கால அவகாசம் மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
ரேஷன் கார்டு!
நாட்டிலுள்ள ஏழை எளிய மக்களுக்கு உதவுவதற்காக ரேஷன் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவு தானியங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்படுகின்றன. பொங்கல் பரிசு தொகுப்பு உள்ளிட்ட நிதியுதவிகளும் கிடைக்கிறது. ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே இந்த உதவிகள் கிடைக்கும்.
ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம்!
‘ஒரே நாடு ஒரே ரேஷன்’ என்ற திட்டத்தை மத்திய அரசு சமீபத்தில் அறிமுகம் செய்தது. இத்திட்டத்தின் கீழ் லட்சக்கணக்கான மக்கள் பயன்பெற்று வருகின்றனர். ரேஷன் கார்டுடன் ஆதார் அட்டையை இணைப்பதன் மூலம், ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தின் கீழ் நம் நாட்டில் யார் வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் ரேஷன் பொருட்களை வாங்கிக் கொள்ளலாம்.
ஆதார் கார்டு முக்கியம்!
ஆதார் கார்டு என்பது இந்தியர்கள் அனைவருக்குமே மிக முக்கியமான ஆவணம் ஆகும். இது வெறும் அடையாள ஆவணம் மட்டுமல்ல. பல்வேறு விஷயங்களில் ஆதார் கார்டை இணைப்பதை அரசு கட்டாயமாக்கியுள்ளது. மொபைல், நம்பர், வங்கிக் கணக்கு, பான் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் ஆதாரை இணைப்பது அவசியமாகும். அந்த வகையில் ரேஷன் கார்டுடன் இணைப்பதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
ரேஷன் கார்டுடன் இணைப்பு!
ரேஷன் கார்டு வைத்திருக்கும் அனைவரும் தங்களுடைய ரேஷன் கார்டை ஆதாருடன் இணைப்பது கட்டாயமாகும். குடும்பத் தலைவர் மட்டுமல்லாமல், குடும்ப உறுப்பினர்களின் ஆதார் கார்டையும் ரேஷன் கார்டுடன் இணைக்க வேண்டும். பல்வேறு வகையான மோசடிகளைத் தடுப்பதற்காக ஆதார் கார்டை ரேஷன் கார்டுடன் இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தகுதியானவர்களுக்கு மட்டும் உதவிகள் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கால அவகாசம்!
ரேஷன் கார்டை ஆதாருடன் இணைக்க கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. கடைசியாக வெளியாகிய அறிவிப்பின்படி, ஜூன் 30ஆம் தேதிக்குள் அனைவரும் தங்களுடைய ரேஷன் கார்டை ஆதாருடன் இணைக்க வேண்டும். அதையும் தாண்டி ஆதார் கார்டை இணைக்காமல் இருந்தால் ரேஷன் உதவிகள் மற்றும் இதர நலத்திட்ட உதவிகளைப் பெறமுடியாமல் போகும் என்று அறிவிக்கப்பட்டது.
கால அவகாசம் மீண்டும் நீட்டிப்பு!
நிறையப் பேர் இவற்றை இணைக்காமல் இருந்த நிலையில், ரேஷன் கார்டை ஆதாருடன் இணைப்பதற்கான கடைசி தேதி செப்டம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. உணவு மற்றும் பொது விநியோகத் துறை இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி கால அவகாசம் முடிவதற்குள் ரேஷன் கார்டை ஆதாருடன் இணைப்பது நல்லது. இந்த அறிவிப்பின் மூலம் ரேஷன் அட்டைதாரர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
எப்படி இணைப்பது?
உணவு வழங்கல் அமைப்பின் அதிகாரப்பூர்வ இணையப் பக்கத்தில் செல்ல வேண்டும். அதில் ஆதாருடன் இணைப்பதற்கான வசதி இருக்கும். ஆதார், ரேஷன் தொடர்பான விவரங்களை அதில் பதிவிட்டு, மொபைல் நம்பரையும் உள்ளிட்டு proceed to submit கொடுக்க வேண்டும். மொபைல் நம்பருக்கு வரும் ஓடிபியை பதிவிட வேண்டும். இவ்வாறு செய்தால் இணைத்து விடலாம்.
மாற்று வழி!
இணையத்தை பயன்படுத்தாமல், நீங்கள் நேரடியாக சென்று ரேஷன் கார்டை ஆதாருடன் இணைக்க விரும்பினால், ஆதார் அட்டை நகல், ரேஷன் கார்டு நகல் மற்றும் ரேஷன் கார்டுதாரரின் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் போன்ற ஆவணங்களை எடுத்துக் கொண்டு ரேஷன் கார்டு மையத்தில் சமர்ப்பிக்க வேண்டும். அங்கே உங்களுடைய ரேஷன் கார்டு ஆதாருடன் இணைக்கப்பட்டுவிடும்
0 Comments