TNPSC வேலை வாய்ப்பு; தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிங்க!

TNPSC அறிவிப்பு; தமிழ்நாடு அரசில் ஆராய்ச்சி உதவியாளர் பணியிடங்கள்; தகுதியுள்ளவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க!

தமிழ்நாடு ஒருங்கிணைந்த ஆராய்ச்சி உதவியாளர் சார்நிலைப் பணிகளில் அடங்கிய பதவிகளை நிரப்புவதற்கான அறிவிப்பை டி.என்.பி.எஸ்.சி வெளியிட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கான தகுதிகள் என்ன? விண்ணப்பம் செய்வது எப்படி? என்பது உள்ளிட்ட தகவல்களை இப்போது பார்ப்போம்.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஒருங்கிணைந்த ஆராய்ச்சி உதவியாளர் சார்நிலைப் பணிகளில் அடங்கிய பல்வேறுபணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் மொத்தம் 6 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 25.07.2023க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

இதையும் படியுங்கள்: UPSC சிவில் சர்வீஸ்: முதல்நிலைத் தேர்வில் கைக் கொடுக்காத எலிமினேஷன் டெக்னிக்; தேர்வு முறையில் மாற்றமா?

ஆராய்ச்சி உதவியாளர் (புள்ளியியல்)

காலியிடங்களின் எண்ணிக்கை

கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Master’s Degree with Statistics or Mathematics முடித்திருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 36,200 – 1,33,100

ஆராய்ச்சி உதவியாளர் (பொருளாதாரம்)

காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Master’s Degree with Economics முடித்திருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 36,200 – 1,33,100

ஆராய்ச்சி உதவியாளர் (புவியியல்)
காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Master’s Degree with Geography முடித்திருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 36,200 – 1,33,100

ஆராய்ச்சி உதவியாளர் (சமூகவியல்)
காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Master’s Degree with Sociology or Social Work முடித்திருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 36,200 – 1,33,100

ஆராய்ச்சி உதவியாளர் (மதிப்பீடு மற்றும் செயல்முறை ஆராய்ச்சித் துறை)

காலியிடங்களின் எண்ணிக்கை: 2
கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Post-Graduate Degree in Economics or Econometrics or Statistics or Business Administration or Mathematics or Social work or Sociology or Anthropology or Agricultural Economics or Public Administration முடித்திருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 36,900 – 1,16,600

வயதுத் தகுதி: இந்தப் பணியிடங்களுக்கு 01.07.2023 அன்று 32 வயதிற்குள் இருக்க வேண்டும்.

 SC, SC(A), ST, MBC, BC, BCM பிரிவினருக்கு வயது வரம்பு இல்லை.

தேர்வு முறை: இந்த பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். மதிப்பீடு மற்றும் செயல்முறை ஆராய்ச்சித் துறை உதவியாளர் பணியிடங்களுக்கு மட்டும் கூடுதலாக நேர்முகத் தேர்வு நடைபெறும்.

எழுத்துத் தேர்வு இரண்டு தாள்களாக நடைபெறும். இதில் முதல் தாளில் சம்பந்தப்பட்ட பாடங்களில் இருந்து வினாக்கள் இடம்பெறும். இதில் 200 வினாக்கள் 300 மதிப்பெண்களுக்கு கேட்கப்படும். இதற்கான கால அளவு 3 மணி நேரம்.

இரண்டாம் தாள் இரண்டு பகுதிகளாக நடைபெறும். முதல் பகுதி தமிழ் மொழித் தகுதித் தேர்வு. இதில் 100 வினாக்கள் 150 மதிப்பெண்களுக்கு கேட்கப்படும். குறைந்தபட்சம் எடுக்க வேண்டிய மதிப்பெண்கள் 60.

இரண்டாம் பகுதி பொது அறிவு. இதில் 100 வினாக்கள் 150 மதிப்பெண்களுக்கு கேட்கப்படும். இதற்கான கால அளவு 3 மணி நேரம்.

விண்ணப்பக் கட்டணம் : ரூ. 150,

 இருப்பினும் ஏற்கனவே நிரந்தர பதிவு வைத்திருப்பவர்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை.

தேர்வுக் கட்டணம் : ரூ. 150,

 இருப்பினும் SC, SC(A), ST மற்றும் விதவைகள் உள்ளிட்ட பிரிவுகளுக்கு கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு உண்டு.

விண்ணப்பம் செய்வது எப்படி?

விண்ணப்பிக்க விரும்புபவர்கள் www.tnpsc.gov.in அல்லது www.tnpscexams.in என்ற இணையதள பக்கத்திற்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும்.

ஏற்கனவே நிரந்தர பதிவு வைத்திருப்பவர்கள் அதன் மூலம் விண்ணப்பிக்கலாம். நிரந்தரப்பதிவு வைத்திருப்பவர்கள் விண்ணப்பக் கட்டணம் செலுத்த தேவையில்லை.
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பம் செய்பவர்கள் தங்களது புகைப்படம் மற்றும் கையொப்பம் ஆகியவற்றை ஆணையம் அறிவித்துள்ள அளவு மற்றும் பார்மட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.

மேலும், தங்களது கல்வி மற்றும் பிறச் சான்றிதழ்களை கையில் வைத்துக் கொண்டு விண்ணப்பிக்க வேண்டும். உங்களது அனைத்து விவரங்களையும், சரியாக உள்ளிட்டு விண்ணப்பக் கட்டணத்தையும் செலுத்தி, சமர்ப்பிக்க வேண்டும். சமர்பிக்கப்பட்ட விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து, சேமித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி: 25.07.2023

இது குறித்து மேலும் விவரங்கள் அறிய
 https://www.tnpsc.gov.in/Document/tamil/13_2023_Tamil.pdf என்ற இணையதள பக்கத்தை பார்வையிடவும்