தமிழ்நாட்டின் 49வது தலைமைச் செயலாளராக ஷிவ் தாஸ் மீனா நியமனம்..! - Kalviseithikal--கல்விசெய்தி

Featured Post

தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் அரசுப் பணியாளா்கள் ஊதிய விவரங்களை அறியலாமா? - தகவல் ஆணையா் பதில்

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலமாக, அரசுப் பணியாளா்களின் ஊதிய விவரங்களைப் பெற ஒவ்வொரு இந்திய குடிமனுக்கும் உரிமை உள்ளதாக மாநில தகவல் ஆண...

Friday, June 30, 2023

தமிழ்நாட்டின் 49வது தலைமைச் செயலாளராக ஷிவ் தாஸ் மீனா நியமனம்..!

 தமிழ்நாட்டின் 49வது தலைமைச் செயலாளராக ஷிவ் தாஸ் மீனா நியமனம்..!


thumb

தமிழ்நாடு அரசின் புதிய தலைமைச் செயலாளராக ஷிவ் தாஸ் மீனா நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதுவரை கூடுதல் தலைமைச் செயலாளராக இருந்த ஷிவ் தாஸ் மீனா தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். தற்போதைய தலைமைச் செயலாளர் இறையன்பு நாளையுடன் ஓய்வு பெறுவதால் அப்பொறுப்புக்கு ஷிவ் தாஸ் மீனா நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஜெய்ப்பூரில் மாளவியா பிராந்திய பொறியியல் கல்லூரியில் சிவில் என்ஜினியரிங் படித்தவர். ஜப்பானில் சர்வதேச ஆய்வுகளில் முதுகலைப் பட்டம் பெற்றவர். இதுவரை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையை மீனா கவனித்து வந்தார்.



ராஜஸ்தான் மாநிலத்தை சேந்த ஷிவ் தாஸ் மீனா 1989ம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரியாக பணியை தொடங்கியவர். காஞ்சி உதவி ஆட்சியராக பணியை தொடங்கிய ஷிவ் தாஸ் மீனா, கோவில்பட்டி உதவி ஆட்சியர் உள்பட பல பதவிகளை வகித்தவர். ஊரக வளர்ச்சித்துறை, நில நிர்வாகத்துறை, போக்குவரத்துத் துறை, ஆகியவற்றிலும் முக்கிய பொறுப்பு வகித்தவர் ஷிவ் தாஸ் மீனா. கூட்டுறவு, உணவு, நுகர்வோர் துரையின் முதன்மை செயலாளராகவும் பதவி வகித்தவர். 2016ல் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 4 செயலாளர்களில் ஒருவராக இருந்தவர். 58 வயதாகும் ஷிவ் தாஸ் மீனா பொறியியல் பட்டப்படிப்பு முடித்தவர் ஆவார்.




ராஜஸ்தான், தமிழ், ஆங்கிலம், இந்தி மற்றும் ஜப்பானிய மொழிகளை அறிந்தவர். ஒன்றிய அரசின் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற அமைச்சகத்திலும் பணி புரிந்தவர். ஐஏஎஸ் பணியில் 30 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். ஒன்றிய அரசுப் பணியில் இருந்து கடந்த ஆண்டு தமிழ்நாடு அரசு பணிக்கு திரும்பினார். இந்நிலையில் தமிழ்நாடு அரசின் புதிய தலைமைச் செயலாளராக ஷிவ் தாஸ் மீனா நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதன் மூலம் தமிழ்நாட்டின் 49வது தலைமைச் செயலாளராக ஷிவ் தாஸ் மீனா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

No comments:

Post a Comment

Popular

Post Top Ad