லண்டனைச் சோந்த கியூ.எஸ். நிறுவனம், உலக அளவில் முன்னணியில் இருக்கும் பல்கலைக்கழகங்களின் தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது.
கல்வி நிறுவனத்தின் மீதான நன்மதிப்பு, கல்வியின் தரம், மாணவா், ஆசிரியா் விகிதம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட பட்டியலில் 41 பல்கலைக்கழகம் இடம் பிடித்திருந்த நிலையில், இந்தாண்டு அதன் எண்ணிக்கை 45 ஆக உயர்ந்துள்ளது
தரவரிசைப் பட்டியலின்படி, உலக அளவில் 149வது இடத்தை மும்பை ஐஐடி பிடித்துள்ளது. டில்லி ஐஐடி 197ஆவது இடத்தையும், ஐஐடி காரக்பூர் 271 ஆவது இடத்தையும், ஐஐடி கான்பூர் 278 ஆவது இடத்தையும், ஐஐடி மெட்ராஸ் 285 ஆவது இடத்தையும், ஐஐடி கவுகாத்தி 364ஆவது இடத்தையும், ஐஐடி ரூர்க்கி 369ஆவது இடத்தையும் பிடித்துள்ளன. இது குறித்து, கியூ.எஸ். நிறுவனம் மேலும் கூறியதாவது:
பல்கலைக்கழங்களின் தரவரிசை பட்டியலானது, ஏற்கனவே உள்ள அளவீடுகளுடன் நிலைத்தன்மை, வேலைவாய்ப்பு முடிவுகள் மற்றும் சர்வதேச ஆராய்ச்சி வலையமைப்பு ஆகிய மூன்று புதிய அளவீடுகளையும் சேர்த்து ஆய்வு செய்து வெளியிடப்பட்டுள்ளது எனக் கூறியுள்ளது.
இது குறித்து மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் கூறுகையில், இந்த ஆண்டுக்கான கியூ.எஸ் உலக பல்கலைக்கழக தரவரிசையில் 45 இந்தியப் பல்கலைக்கழகங்கள் இடம்பிடித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. கடந்த 9 ஆண்டுகளில் பிரதமர் மோடி இந்தியாவில் கல்வியை மாற்றியமைத்துள்ளார். இந்தியப் பல்கலைக்கழகங்கள் இன்று உலகத் தரத்தில் உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்
0 Comments